இன்று முதல் அமலுக்கு வந்த புதிய பான் கார்டு விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

இன்று முதல் நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் அதில் தந்தை பெயரினை குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

news18
Updated: December 5, 2018, 2:03 PM IST
இன்று முதல் அமலுக்கு வந்த புதிய பான் கார்டு விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
இன்று முதல் நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் அதில் தந்தை பெயரினை குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
news18
Updated: December 5, 2018, 2:03 PM IST
வரி ஏய்ப்பு செய்வதை குறைக்க மற்றும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

பான் கார்டுக்கான புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பினை மத்திய நேரடி வரி ஆணையம் சென்ற மாதமே அறிவித்து இருந்த நிலையில் அது குறித்து மேலும் விளக்கமாக பார்க்கலாம்.

பான் கார்டு விண்ணப்பம்


New PAN card rules from today. Check what has changed

இன்று முதல் நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் அதில் தந்தை பெயரினை குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேற்று வரை தந்தை பெயர் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வந்தது. ஒற்றைப் பெற்றோர் மற்றும் தாய் மட்டுமே உள்ளவர்களுக்காக வருமான வரித்துறை இந்த முடிவினை எடுத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பான் கார்டில் தந்தை பெயருக்கு பதிலாகத் தாயின் பெயர் அச்சிட வேண்டும் என்றால் அதனையும் மாற்றித் தேர்வு செய்துகொள்ளலாம்.

எதற்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்


சிறு வணிகங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்க ஆண்டுக்கு குறைந்தது 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பான் கார்டு விதிமுறை நிர்வாக இயக்குநர், இயக்குநர், நிறுவனர், எழுத்தாளர், டிரஸ்டி, தலைமை நிர்வாக அதிகாரி போன்றவர்களுக்கும் பொருந்தும்.

Also Watch:
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...