பட்ஜெட் 2019-ல் அறிவிக்கப்பட்ட புதிய பான் கார்டு, ஆதார் விதிகள்..!

news18
Updated: July 5, 2019, 4:52 PM IST
பட்ஜெட் 2019-ல் அறிவிக்கப்பட்ட புதிய பான் கார்டு, ஆதார் விதிகள்..!
பான் கார்டு, ஆதார் எண் இனைப்பு
news18
Updated: July 5, 2019, 4:52 PM IST
2019 பட்ஜெட் உரையில் புதிய வருமான வரி விதிகளை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி விரைவில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் ஒன்றோடு ஒன்று பகிர்ந்துக்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி விதிகளின் கீழ், வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு தேவையில்லை. ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, யாரிடமெல்லாம் பான் கார்டு இல்லையோ அவர்கள் ஆதார் விவரங்களை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம். இதற்காக ஆதார், பான் கார்டு விவரங்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பரமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தெரிவித்தார்.

புதிய விதிகளின் படி பான் கார்டு இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முயலும் போது, வருமான வரித் துறை அவர்களுக்கு சிறப்பு பான் எண்ணை வழங்கும் என்று கூறப்படுகிறது.

பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைத்துள்ள வருமான வரி செலுத்துனர்கள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே பான் கார்டு பெற்றுள்ளவர்கள், அதை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. விரைவில் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் பார்க்க:
First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...