புதிய வண்ணம் & வடிவமைப்புடன் புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில்..!

புதிய வண்ணம் & வடிவமைப்புடன் புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில்..!
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: February 11, 2020, 10:18 PM IST
  • Share this:
புதிய வண்ணம் மற்றும் வடிமைப்புடன் கூடிய புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்தில் வர உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளை தடுப்பதற்காக புதிய ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி புதிய வண்ணம் மற்றும் வடிவமைப்புகள் கூடிய ரூ.10, 20, 50, 100, 500, 2000 நோட்டுகளை அதிரடியாக வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் வெளியாக உள்ளது. புதிய ஒரு ரூபாய் நோட்டு 9.7 செ.மீ நீளமும் 6.3 செ.மீ அகலத்துடன் செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நூறு சதவீதம் பருத்தி காகிதத்துடன் 110 மைக்ரான் தடிமன் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடைக்கொண்டதாவும் இருக்கும்.


அசோகத்தூணுடன் (சத்யமேவ் ஜெயதே), மையத்தில் மறைவாக '1' குறிக்கப்பட்டிருக்கும். 'இந்திய அரசு' என்ற சொற்களும், ரூபாயை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் '₹' 2020 சின்னத்துடன், நாட்டின் விவசாயத்தை சித்தரிக்கும் வகையில் தானியங்களின் வடிவமைப்பு மற்றும் அதனைச் சுற்றி 'சாகர் சாம்ராட்' எண்ணெய் ஆய்வு தளம், பதினைந்து இந்திய மொழிகளும் இடம் பெற்றிருக்கும்.

ஒரு ரூபாய் நோட்டின் எதிரெதிர் பக்கத்தில் “இந்திய அரசு” என்ற சொற்களுக்கும், நிதி அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ அதானு சக்ரவர்த்தியின் இருமொழி கையொப்பமும் இடம் பெற்றிருக்கும். ஒரு ரூபாய் நோட்டின் ஒட்டுமொத்த நிறம் இளஞ்சிவப்பு பச்சை நிறமாகவும், மற்ற வண்ணங்களுடன் இணைந்து தலைகீழாகவும் இருக்கும்.
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்