Home /News /business /

புதிய வருமான வரி விதிகள் வரியை குறைக்க உதவுமா?

புதிய வருமான வரி விதிகள் வரியை குறைக்க உதவுமா?

வருமான வரி விதிகள்

வருமான வரி விதிகள்

income tax | கடந்த ஆண்டில் இருந்து, இரண்டு விருப்பங்களை வரி செலுத்துபவர்களுக்கு வருமானவரிச் சட்டம் வழங்கியுள்ளது. இந்த ஆப்ஷன்களில் ஒரு சில அலொவன்ஸ் மற்றும் விலக்குகளில் மாற்றங்கள் உள்ளன.

    இந்திய  வருமானவரிச் சட்டத்தின்படி தற்போது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டாம். அதற்கு மேல் வருமானம் ஆண்டு வருமானம் இருந்தால் எவ்வளவு தொகையை வருமானமாக இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல வரியை கணக்கிட்டு செலுத்த வேண்டும். மேலும், ஆண்டு வருமானத்தில், அது சம்பளமாக இருந்தாலும் சரி, வியாபார வருமானமாக இருந்தாலும் சரி, சில விலக்குகள் உள்ளன.

    கடந்த ஆண்டில் இருந்து, இரண்டு விருப்பங்களை வரி செலுத்துபவர்களுக்கு வருமானவரிச் சட்டம் வழங்கியுள்ளது. இந்த ஆப்ஷன்களில் ஒரு சில அலொவன்ஸ் மற்றும் விலக்குகளில் மாற்றங்கள் உள்ளன. இந்த நிதியாண்டு ஏற்கனவே தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், நீங்கள் வரி செலுத்துபவர் அல்லது மாதச் சம்பளம் வாங்குபவர்கள் என்றால், புதிய வரி அட்டவணையை தேர்வு செய்கிறீர்களா அல்லது பழைய வரி அட்டவணையைத் தேர்வு செய்கிறீர்களா என்பதைப் பற்றி முடிவு செய்திருக்க வேண்டும். எந்த திட்டத்தில் உங்களுக்கு வரி சேமிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    புதிய வருமான வரியில் என்ன மாற்றங்கள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

    புதிய வரி விதிப்பில் நிறைய குழப்பங்களும் கணக்கீடுகளும் உள்ளன. இந்த புதிய வரி விதிப்பு இந்தியாவில் வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் HUF க்கு மட்டுமே பொருந்தும்.

    புதிய வரி விகிதத்தில், மொத்த வருமானம் ரூ.15 லட்சம் வரை சலுகை அடிப்படையில் வரி கணக்கு செய்யப்படும். 5%, 10%, 15%, 20% மற்றும் 25% என்ற வரிசையான வரி அடுக்குகளுடன் 15 லட்சம் ரூபாய் வரை செல்லுபடியாகும். இவற்றில், உங்களின் வருமானத்தில் 2.50 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறும். நீங்கள் ஆண்டுக்கு 15 லட்சம் சம்பாத்தித்தால், 12.50 லட்சத்துக்கு தான் வரி அடுக்குகளின் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.

    புதிய வரி விதிப்பு முறையில், விலக்குகள் இல்லை.தற்போதுள்ள புதிய வரி விதிப்பின் படி நீங்கள் பலன்களைப் பெற விரும்பினால், பழைய வரி விதி முறையில் உள்ள பல வரி விலக்குகளை நீங்கள் பயன்படுத்தட்ட முடியாது.

    ALSO READ | உங்கள் ஆதார் அட்டையின் விவரங்களை எத்தனை முறை மாற்றிக் கொள்ளலாம் - தெரிந்து கொள்ளுங்கள்
     சம்பளம் வாங்குபவர்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ₹50,000 வரை அடிப்படை விலக்கை உங்களின் மொத்த வருமானத்திலிருந்து நீங்கள் கழித்துக் கொள்ளலாம். அதேபோல வீட்டு வாடகைக்கான அலவன்ஸ், பயணத்திற்கான உதவித்தொகை ஆகிய தொகைகளையும் நீங்கள் மொத்த வருமானத்தில் இருந்து விலக்காக பெறலாம். ஆனால் இந்த விருப்பங்கள் எதுவுமே நீங்கள் புதிய வரி விதிப்பு முறையை பயன்படுத்தினால் உங்களுக்கு கிடைக்காது.

    மேலும், வருமான வரி சட்டம், 80 C பிரிவில் சேர்க்கப்படும் விலக்குகள் (வைப்பு நிதி கணக்குக்கு செலுத்தும் தொகை, LIP, பள்ளிக் கட்டணம், PPF, தேசிய சேமிப்பு சான்றிதழ், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற பல்வேறு செலவினங்கள் மற்றும் சேமிப்புகளை உள்ளடக்கியது), 80 CCD(1) & 80 CCD(1B) பிரிவு VIA கீழ் உள்ள பல்வேறு விலக்குகள், 80D (உடல்நலக் காப்பீட்டு ப்ரீமியம் தொகை) 80D மருத்துவ செலவுகள், 80G பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்கொடை, 80TTA பிரிவின் கீழ் வரும் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டி உள்ளிட்ட எந்த விலக்குகளும் புதிய வரி விதிப்பு முறையில் கிடைக்காது.

    ALSO READ | விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2,000 உதவித்தொகை - வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தேதி குறித்து வெளியான தகவல்

    உங்களுடைய வருமானம் ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய்க்கும் மேல் இருந்தால், நீங்கள் புதிய வரி விதிப்பு முறையின் அடிப்படையில், 75 ஆயிரம் ரூபாய் வரியில் மிச்சம் பிடிக்க முடியும். அதாவது, அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வரி விகிதத்தில் சலுகைகள் உள்ளன.

    ஆனால், உங்களுக்கு விலக்குகள் மற்றும் வருமான வரி சட்டப்பிரிவுகளின் படி குறிப்பிட்ட தொகைகளை வருமானத்தில் இருந்து குறைக்கும் தொகை அதிகமாக இருந்தால், புதிய வரி விதிப்பு பொருந்தாது.

    மாதச் சம்பளம் பெறும், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு, புதிய வரி விதிப்பு வருமான வரியை குறைக்கும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Income tax

    அடுத்த செய்தி