• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Income Tax : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய இணையதளம் - ஜூன் 7ம் தேதி முதல் அறிமுகம்!

Income Tax : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய இணையதளம் - ஜூன் 7ம் தேதி முதல் அறிமுகம்!

வருமான வரி

வருமான வரி

புதிய இணையதளம் வாயிலாக வருமான வரி செலுத்துபவர்களில் தங்கள் வரி பணத்தை இதில் எளிமையாக செலுத்தி கொள்ளலாம் என கூறப்பப்ட்டுள்ளது.

  • Share this:
    வருமானத் வரித்துறை சார்பில் புதிய இணையதளம் வருகிற ஜூன் 7ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த புதிய இணையதளத்தின் மூலம் மின்னணு முறையில் வருமான வரித்துறையிடம் சந்தேகம் எழுப்புவது, ரீபெண்ட் பெறுதல் உள்ளிட்ட அனைத்து வகையான வருமான வரித்துறை சார்பான செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.

    இதனையடுத்து தற்போது பயன்பாட்டில் இருக்கும் இணையதளத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஜூன் 1 முதல் ஜூன் 6ம் தேதிக்குள் நிறுத்திவைக்கப்படும். இந்த நாட்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகள் அனைத்தும் முன்னதாகவோ அல்லது ஜூன் 10க்கு பிறகோ மாற்றப்படும். இந்த நாட்களில் வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் வருமான வரித்துறை அலுவலர்களால் பயன்படுத்த முடியாது. அதனைத் தொடர்ந்து புதிய இணையளம் ஜூன் 7ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும்.

    Also Read: Angelina Jolie: நூற்றுக் கணக்கான தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஏஞ்சலினா ஜோலி!

    வருமான வரித்துறை அலுவலர்கள் அனைத்து விதமான குறைகளையும் கோரிக்கைகளையும் ஜூன் 10 முதல் கவனிப்பார்கள். புதிய இணையதளத்தில் வருமான வரி செலுத்துபவர்கள், அவர்களது தொழில், அல்லது தனிப்பட்ட முறையிலான வருமான வரி ரிட்டர்ன்ஸ் மற்றும் குறைகள், இன்ன பிற பணிகள் அனைத்தும் நடைபெறும். இந்த இணையதளம் பயனாளர்களுக்கு இலகுவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது மின்னணு முறையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefilling.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் ஜூன் 7ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2020 - 21 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தனி நபர்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாம். கொரோனா பரவல் சூழலில் வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த அவகாசம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் புதிய இணையதளம் வாயிலாக வருமான வரி செலுத்துபவர்களில் தங்கள் வரி பணத்தை இதில் எளிமையாக செலுத்தி கொள்ளலாம் என கூறப்பப்ட்டுள்ளது. தனி நபர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பணியாளர்களுக்கு வருமான வரிப் பிடித்ததற்கான சான்றிதழை நிறுவனங்கள் வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யத் தேவையில்லாத வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அளவு அக்டோபர் 31ம் தேதியும் அவகாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: