ஐஆர்சிடிசி தனது ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளத்தை அன்மையில் புதுப்பித்து, இது அடுத்த தலைமுறைக்கான டிக்கெட் புக்கிங் தளம் என்றும் அறிவித்தது.
புதிய இணையதளத்தில் ஐஆர்சிடிசி 8 அம்சங்களை புதியதாக இணைத்துள்ளது. இதற்காகத் தான் இதை அடுத்த தலைமுறைக்கான இணையதளம் என்றும் ஐஆர்சிடிசி கூறிவருகிறது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் 6 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ள நிலையில், இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
1) புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாகின் செய்யாமலே ரயில் நேரம், டிக்கெட் குறித்த விவரங்களை அறிய முடியும்.
2) இணையதளத்தில் உள்ள எழுத்தின் அளவை தங்களது வசதிக்கு ஏற்றவாறு கூட்டியும், குறைத்தும் கொள்ளலாம்.
3) ரயில் டிக்கெட் புக் செய்யும் போது, காத்திருப்பு மற்றும் RAC என்ற நிலையிருக்கும் போது டிக்கெட் புக் செய்தால் கண்டிப்பாக டிக்கெட் கிடைக்குமா என்று கணிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
4) ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்ள Vikalp என்ற சேவையைப் பயன்படுத்தும் போது நாம் செல்ல விரும்பும் ரயிலில் டிக்கெட் இல்லையெனில் அதற்கு அடுத்துச் செல்லும் ஏதேனும் ஒரு ரயிலில் டிக்கெட் பெற முடியும்.
5) ஐஆர்சிடிசி பயனர்களால் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு 6 விருப்ப வங்கிகளைத் தேர்வு செய்ய முடியும்.
6) ரயில் டிக்கெட் புக் செய்த பிறகு எளிமையாக அது குறித்த விவரங்களைப் பார்க்கக் கூடிய வசதிகள் உள்ளன.
7) ரயில் புறப்பாடு நேரம், வருகை நேரம், வகுப்பு, ரயில் மற்றும் ஒதுக்கீடுகளை வைத்து ரயில் தேடுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
8) எந்த வகையான மொபைல் ஃபோன்கள் என்றாலும் எளிதாகப் பயன்படுத்தும் முறையில் இந்த தளத்தை வடிவமைத்துள்ளனர்.
மேலும் பார்க்க:
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.