எஸ்பிஐ ஏடிஎம்கார்டு பயன்படுத்துவோர் வரும் வெள்ளிக்கிழமை முதல் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க OTP எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள், மோசடிகளை தடுக்கும் வகையில் இந்தாண்டு ஜனவரி முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை OTPயுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சேவை தற்போது 24 மணிநேரமும் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உரியவரிடம் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.