பாரம்பரிய விஷயங்களுக்கு விடை கொடுக்கும் புதிய பட்ஜெட்... பல புதிய மாற்றங்கள்

பாரம்பரிய விஷயங்களுக்கு விடை கொடுக்கும் புதிய பட்ஜெட்... பல புதிய மாற்றங்கள்

மத்திய பட்ஜெட் 2021

பட்ஜெட் உரையே அச்சடிக்கப்பட்டாமல், மொபைல் அப்ளிகேசனில் இருந்து பட்ஜெட் வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
எதிர்வரும் பட்ஜெட், பல புதிய மாற்றங்களை பெற்றிருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பில் தொடங்கி அனைத்திலும் சில பாரம்பரிய விஷயங்களுக்கு விடை கொடுக்கும் பட்ஜெட்டாக 2021-22ம் ஆண்டு பட்ஜெட் இருக்கும்.

வரும் பிப்பரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுவாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு, ஒவ்வொரு நிதி அமைச்சரும், பட்ஜெட் உரையை, ஒரு பெட்டியில் வைத்து அதை, நாடாளுமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் மத்தியில் காட்டுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, பட்ஜெட் அச்சடிப்பதில் தொடங்கி அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு LEATHER SUITCASEல் பட்ஜெட் உரையை வைத்து நாடாளுமன்றத்திற்கு நிதி அமைச்சர்கள் எடுத்து வருவது தான் வழக்கம். இது பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இருந்து பின்பற்றப்பட்ட விஷயம்.

1860ம் ஆண்டு அப்போதைய நிதிதிட்ட தயாரிப்பு அதிகாரி, இங்கிலாந்து ராணியின் படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் பட்ஜெட் உரையை எடுத்து வந்து சமர்பித்தார். பின்னாளில், அவ்வாறு செய்த அதிகாரியின் பெயரான WILLIAM GLADSTONEன் பெயரிலேயே அந்த பெட்டி அழைக்கப்பட்டது. அதாவது, நிதி அமைச்சர்கள் சுமந்து வரும் பெட்டியின் பெயர் GLADSTONE BOX. இங்கிலாந்தில் ஒரே பெட்டி தான் பட்ஜெட்டை எடுத்து வர பயன்படுத்தப்பட்டது. அந்த பெட்டி என்பது நிதி அமைச்சகத்தின் சொத்து. எந்த நிதி அமைச்சர் வந்தாலும், பட்ஜெட் உரைகள் அந்த GLADSTONE BOXல் தான் எடுத்து வரப்படும்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல், ஒரே பெட்டி பயன்படுத்தப்பட்டு, அவை அழுக்கு படித்து பார்க்க நன்றாக இல்லை என்ற காரணத்தால், 2010ம் ஆண்டில் அந்த பெட்டிக்கு ஓய்வு கொடுத்தது இங்கிலாந்து அரசு. இந்தியாவை பொறுத்தவரை, இது நிதி அமைச்சர்களின் விருப்பமாகவே இருந்துள்ளது. 1970 முதல் 2019ம் ஆண்டு வரை நிதி அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பட்ஜெட் எடுத்து வரும் பெட்டிகள் மாறியுள்ளன. ஆனால், 2019ம் ஆண்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரு சிகப்பு பையில் வைத்து அதை எடுத்து வந்தது, பெட்டிகளுக்கு விடை கொடுத்தார்.

தற்போது, அடுத்த கட்டமாக பட்ஜெட் உரையே அச்சடிக்கப்பட்டாமல், மொபைல் அப்ளிகேசனில் இருந்து பட்ஜெட் வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, டிஜிட்டல் முறையில் union budget என்ற மொபைல் அப்ளிகேசன் வழியாகவே தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான union budget மொபைல் அப்ளிகேசனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன், union budget மொபைல் அப்ளிகேசனில் அனைவரின் பார்வைக்கும் பட்ஜெட் உரை பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் பட்ஜெட் உரையை படிக்க, ஆண்டிராய்ட் மற்றும் IOS இயங்குதளங்களில் இருந்து union budget அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Published by:Vijay R
First published: