ஹோம் /நியூஸ் /வணிகம் /

தபால் அலுவலக விதிகளில் புதிய மாற்றங்கள்... குறைந்தபட்ச நிலுவை தொகை அளவு உயர்வு

தபால் அலுவலக விதிகளில் புதிய மாற்றங்கள்... குறைந்தபட்ச நிலுவை தொகை அளவு உயர்வு

தபால் அலுவலக சேமிப்புத்திட்டம்

தபால் அலுவலக சேமிப்புத்திட்டம்

Post Office New Rules | இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் மோசடி வழக்குகளைத் தவிர்க்கும் விதமாக போஸ்ட் ஆபிசில் பல்வேறு விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் நிச்சயம் இந்த புதிய விதிமுறைகள் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய மக்கள் மிகவும் பாதுகாப்பாக உணரும் சேமிப்புத்திட்டங்களில் ஒன்று தான் தபால் அலுவலக சேமிப்புத்திட்டம். கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத்தரப்பட்ட மக்களிடமும் நேரடியாக சென்று சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதில் முக்கிய பங்குவகிப்பதும் இந்திய அஞ்சல் அலுவலகங்கள் தான். தபால் அலுவலகத்தில் சேமிப்புக்கணக்கு, பிஎஃப், ஆர்டி, எஃப்டி, செல்வமகள் என அவரவர்களுக்கு ஏற்றவாறு சேமிப்புத் திட்டங்களை ஆரம்பித்து பயன்பெற்று வருகின்றனர். அதற்கேற்றார் போல் தபால் அலுவலகங்களும் சரியான வட்டி விகிதத்துடன் பணத்தைத் திரும்ப தருவதோடு, பல்வேறு வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது.

இருந்த போதும் பல முறைகேடுகள் நடப்பதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தான், இதனைத் தடுக்கும் வகையில் தபால் அலுவலக தொடர்பாக மாற்றம் செய்துள்ள விதிகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுற்றறிக்கையின் மூலமாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில், நீங்கள் அஞ்சலக கணக்கில் உள்ள பணத்தைத் திரும்ப பெறும் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை என்னென்ன மாற்றங்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால், தற்போது இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

தபால் அலுவலக கணக்கில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்…

தபால் நிலையங்களில் வங்கி மோசடிகளைத் தடுக்கும் விதமாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஒரு வாடிக்கையாளர் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க விரும்பினால், அவர்களுக்கு சிறப்பு சரிபார்ப்பு தேவைப்படும் (special verification) என்று தெரிவித்துள்ளது. இதோடு ஒரே ஒரு அதிகாரி மட்டும் பணிபுரியும் அஞ்சலகங்களில் அதாவது single-handed post office ல் அதிக பணம் எடுப்பதற்கான செயல்முறை தற்போது அகற்றப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் உங்களது சேமிப்புப்பணத்தை நீங்கள் இங்கே எடுக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். இந்த 2 விதிகள் தபால் அலுவலகங்களில் நடைபெறும் மோசடிகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read : தினமும் ரூ.100 முதலீடு.. 15 ஆண்டுகளில் ரூ.10 லட்சம்.. ரிஸ்க் இல்லாத பிபிஎஃப் முதலீட்டின் அம்சங்கள் இது தான்.!

இதோடு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் வசதிக்காக தற்போது பணம் எடுக்கும் வரம்பையும் தபால் அலுவலகம் உயர்த்தியுள்ளது. முன்னதாக அஞ்சல கணக்கு வைத்திருப்பவர்கள் ரூபாய் 5 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும். தற்போது ரூபாய் 20 ஆயிரம் வரை எடுக்க முடியுமாம். மேலும் எந்தவொரு வாடிக்கையாளர்களின் கணக்கிலும் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளை கிளை தபால் மாஸ்டர் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : விவசாயிகள் பென்சன் பெற உதவும் புதிய திட்டம் - மத்திய அரசு அறிமுகம்.!

மேலும் தபால் அலுவலக கணக்கில் குறைந்தப்பட்ச நிலுவைத் தொகை ரூபாய் 50 லிருந்து ரூ.500 ஆக உயர்ந்தியுள்ளது. எனவே ரூபாய் 500க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் நிதியாண்டில் கடைசியில் தபால் அலுவலகம் உங்களுக்கு ரூபாய் 100 அபாரதம் விதிக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களது கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருந்தால், கணக்கு தானாகவே மூடப்படும். அதே வேளையில் தனிநபர் அல்லது கூட்டுக்கணக்குகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி உங்களுக்கு கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Accounts, Central govt, Post Office