ஹோம் /நியூஸ் /வணிகம் /

பிறந்த குழந்தைக்கு இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா? முழு விபரம்!

பிறந்த குழந்தைக்கு இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா? முழு விபரம்!

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்களில், குழந்தை பிறந்து மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்கள் வரை காப்பீடு வாழங்குவது இல்லை.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உடல்நலக் காப்பீடு என்பது எதிர்காலத்துக்கான அவசரத் தேவைக்கான ஒரு பாதுகாப்பாக கருதப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும், பெரிய நோய்க்கான சிகிச்சை தேவைப்படும் போது அல்லது விபத்து நேர்ந்தால், மிகப்பெரிய தொகை மருத்துவ செலவுகளுக்காக தேவைப்படும். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று அறியாமல் விழிக்கும் பொழுது மருத்துவ காப்பீடு கை கொடுக்கிறது.

உடல்நலக் காப்பீடு அல்லது மருத்துவக் காப்பீடு என்பது ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப பலவிதங்களில் கிடைக்கிறது. காப்பீட்டுத்தொகை மற்றும் எந்த விதமான நோய்களுக்கு நீங்கள் கவரேஜ் பெற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உடல்நலக் காப்பீட்டின் பிரீமியம் தொகை கணக்கிடப்படும். தனிப்பட்ட முறையில் வாங்கும் போது, தனிநபர்களுக்கான உடல்நலக் காப்பீடு பெறலாம். அதே போல, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உடல்நலம் அல்லது மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. அதில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்திருக்கும் ஊழியர்களின் குடும்பத்தார், அதாவது கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரையும் காப்பீட்டில் இடம் பெறுவார்கள். சில நேரங்களில் ஊழியரின் பெற்றோர்கள் பெயரும் கூடுதலாக சேர்க்கும் விருப்பமும் வழங்கப்படுகிறது.

சந்திரகலா மகள் வசுவால் வீட்டில் வெடிக்கும் மிகப் பெரிய பிரச்சனை!

குழந்தைகளுக்கு பொறுத்தவரை தனிப்பட்ட மருத்துவ காப்பீடு தேவை இல்லை எனும் பட்சத்தில் அம்மா அல்லது அப்பாவின் மருத்துவ காப்பீட்டுலேயே அவர்களும் இடம் பெறுகிறார்கள். இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எனப்படும் உடல் நலக் காப்பீட்டில் எந்தவிதமான கவரேஜ் இருக்கிறது, எப்போதிலிருந்து பிறந்த குழந்தைக்கு காப்பீட்டின் பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஊழியர்களின் குழு காப்பீடாக இருந்தாலும் சரி அல்லது தனிநபருக்கான மருத்துவ காப்பீடாக இருந்தாலும் சரி, மெட்டர்னிட்டி பிளான் எனப்படும் மகப்பேறு காப்பீட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கவரேஜ் இருக்கிறது.

கண்ணம்மா மீது செம்ம கோபத்தில் பாரதி.. கடைசியில் நடந்த கதையே வேற !

ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மகப்பேறு திட்டத்திற்கு அல்லது தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பிறக்கும் குழந்தைக்கு கூடுதலாக ஆட்-ஆன் கவரேஜ் என்னும் விருப்பத் தேர்வை வழங்கி பிறக்கப் போகும் குழந்தைக்கும் காப்பீட்டின் பலன்களைப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது.

அதாவது நீங்கள் ஏற்கனவே மருத்துவ காப்பீடு பெற்றிருந்தால் உங்கள் நிறுவனத்திடம் பிறக்கப்போகும் குழந்தைக்கு மருத்துவ காப்பீட்டில் சேர்ப்பதற்கான ஆப்ஷன்கள் இருக்கிறதா என்பதை பற்றி கேட்டு தெரிந்து இணைத்து கொள்ளலாம். அல்லது ஆட்-அன் விருப்பங்கள் இருக்கும் பொழுது கூடுதலாக பிரீமியம் செலுத்தி அதை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டுக்கும் பொருந்தும், தனிநபராக நீங்களே வாங்கும் காப்பீட்டுக்கும் பொருந்தும்.

கூடுதலாக இந்த காப்பீட்டின் பலனாக, குழந்தை பிறந்த 90 நாட்கள் வரை கவரேஜ் கிடைக்கும். இந்த 90 நாட்களுக்குள் குழந்தைக்கு ஏதாவது மருத்துவ சிகிச்சைக்கான தேவைப்பட்டால் காப்பீட்டின் வழியே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அரசாங்கம் வெளியிட்ட தடுப்பூசியின் அட்டவணைப்படி காப்பீட்டைப் பயன்படுத்தி, குழந்தைக்கு தடுப்பூசிகளை செலுத்தலாம். கை குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளுக்கு காப்பீட்டை பொறுத்தவரை அதிகபட்சம் ரூ. 10,000 வரை கிளைம் செய்யலாம்.

ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்களில், குழந்தை பிறந்து மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்கள் வரை காப்பீடு வாழங்குவது இல்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Insurance, Life Insurance, New born baby