ஹோம் /நியூஸ் /வணிகம் /

2021-2022 நிதியாண்டின் 4வது காலாண்டில் நெட்வொர்க் 18 நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு

2021-2022 நிதியாண்டின் 4வது காலாண்டில் நெட்வொர்க் 18 நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு

நெட்வொர்க் 18

நெட்வொர்க் 18

தொலைக்காட்சி செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் செய்திகள் ஆகிய மூன்று பிரிவுகளிலும் 2021-22 இல் நெட்வொர்க்18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் தனது சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் (Network18 Media & Investments) 2021-2022 நிதியாண்டில் 4வது காலாண்டிற்கான தனது கணக்குகளை வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் அதன் நிகர வருவாய்  61.6 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்தி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மற்றும்  பொழுதுபோக்கு வணிகம் மூலம் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில்ரூ.  61.6 கோடி காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. இதேபோல், காலாண்டு வருவாயும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.6 சதவீதம் அதிகரித்து ரூ.1621 கோடியாக உயர்ந்துள்ளது.

செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் விளம்பர வருவாய் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை உயர்த்தியதன் காரணமாக மூலம் இந்த வலுவான வருவாய் வளர்ச்சி கிடைத்துள்ளது.

இது தொடர்பாக  நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் தலைவர் ஆதில் ஜைனுல்பாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"எண்களின் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வணிகம் தொடர்ந்து வளரக்கூடிய ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் அடிப்படையில். 2022 நிதியாண்டு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு ஆகும்.  நிதி செயல்திறன் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வணிகங்களில் முதலீடு செய்வதற்கான எங்கள் முடிவை உறுதிப்படுத்தியுள்ளது, இது ஊக்கமளிக்கும் நேர்மறையான முடிவுகளைக் காட்டத் தொடங்கியது ” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை.. தமிழ்நாட்டில் மட்டும் 9 ஆயிரம் கோடிக்கு விற்பனை எனத் தகவல்

மேலும், தொலைக்காட்சி பலத்தை வலுப்படுத்தும் அதே வேளையில் டிஜிட்டல் துறையில் முன்னணி நிறுவனமாக மாறுவதற்கான லட்சிய இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் செய்திகள் ஆகிய மூன்று பிரிவுகளிலும் 2021-22 இல் நிறுவனம் தனது சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. டிஜிட்டல் செய்திப் பிரிவு 2021-22 இல் லாபகரமாக மாறியது மற்றும் குழுவின் ஒட்டுமொத்த வருவாய்க்கு நெருக்கமான வருவாய்டை டிஜிட்டல் செய்திப் பிரிவு வழங்கியது என்று கூறியுள்ள நெட்வொர்க் 18, ரஷ்யா-உக்ரைன் மோதலால் மோசமடைந்த உயர் பணவீக்கச் சூழல், நுகர்வோர் தேவையையும், அதன் விளைவாக, விளம்பரச் செலவினங்களையும் பாதித்தது என்றும் கூறியுள்ளது. 

ஒளிபரப்பு

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் செயல்முறை வருவாய் ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்ந்து ரூ.346 கோடியாக இருந்ததால், ஒளிபரப்பு வணிகம் உறுதியான உயர்மட்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வணிகம், உள்ளூர், தேசியம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் விளம்பர வருவாய் அதிகரித்ததால் 2021-2022ல் வருவாய் வளர்ச்சி 14 சதவீதம் அளவு உயர்ந்தது.

பொழுதுபோக்கு

செயல்பாட்டு வருவாய் ஆண்டுக்கு 11 சதவீதம் அதிகரித்து ரூ.1,150 கோடியாக இருந்ததால், பொழுதுபோக்குப் பிரிவின் டாப் லைன் செயல்திறன் காலாண்டில் வலுவாக இருந்தது. பொழுதுபோக்கு வணிகம்  18.2 சதவிகிதம் வலுவான வருவாயை பராமரிக்கும் அதே வேளையில், 2021-22 ஆம் ஆண்டில் 23 சதவிகிதம் அதிகரித்து,அதன் மிக உயர்ந்த வருடாந்திர செயல்பாட்டு லாபமான ரூ.777 கோடியை எட்டியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் நியூஸ்

டிஜிட்டல் செய்தி வணிகமானது Network18 மீடியாவின் காலாண்டில் தனித்துவமாக உள்ளது.  ஏனெனில் இயக்க வருவாய்கள் ஆண்டுக்கு 32 சதவீதம் உயர்ந்து ரூ. 80 கோடியாக உயர்ந்தது மற்றும் மார்ச் வரையிலான காலாண்டில் இயக்க லாபம் 77 சதவீதம் உயர்ந்துள்ளது.

First published:

Tags: Network 18, News18 Network