Home /News /business /

நெட்வொர்க் 18 நிறுவனத்தின் காலாண்டு வருவாய், லாபம் அதிகரிப்பு

நெட்வொர்க் 18 நிறுவனத்தின் காலாண்டு வருவாய், லாபம் அதிகரிப்பு

 நெட்வோர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ்

நெட்வோர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ்

நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்தி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மற்றும்  பொழுதுபோக்கு வணிகம் மூலம் டிசம்பர் 31, 2021இல் முடிவடைந்த காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக  ரூ.373 கோடி காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது

    டிசம்பர் 31, 2021 இல் முடிவடைந்த காலாண்டில் நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ்(Network18 Media & Investments) இதுவரை இல்லாத லாபத்தையும் வருவாயையும் பதிவு செய்துள்ளது.

    நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்தி, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மற்றும்  பொழுதுபோக்கு வணிகம் மூலம் டிசம்பர் 31, 2021இல் முடிவடைந்த காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக  ரூ.373 கோடி காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. இதேபோல், காலாண்டு வருவாயும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதம் அதிகரித்து ரூ.1657 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு காலாண்டில் நெட்வோர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்சின் அதிகபட்ச வருவாய் இதுவாகும்.

    பிராந்திய செய்தி நிறுவனங்கள் தங்களின் முதல் காலாண்டு லாபத்தை எட்ட பிராந்திய சந்தைகளின் வருவாய் உயர்வு உதவியுள்ளது. வருவாய் வளர்ச்சி, செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் குறைந்த நிதிச் செலவுகள் ஆகியவற்றால் வரிக்கு முந்தைய லாபம் 31 சதவீதம் உயர்ந்து ரூ.337 கோடியாக உள்ளது.

    டிஜிட்டல் தளத்தை பயனர்களும் விளம்பரதாரர்களுக்கு ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவதால் டிஜிட்டல் விளம்பர வருவாயும் அதிகரிப்பதாக  நெட்வொர்க் 18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    2020 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் 2 மடங்குக்கும் அதிகமான விளம்பர வருவாயுடன் வலுவாக தொடர்ந்து வளர்ந்தன. வலுவான விளம்பரத் தேவையால் , நெட்வொர்க்கின் YTD விளம்பர வருவாய் ஏற்கனவே FY21க்கான முழு ஆண்டு எண்ணிக்கையை விஞ்சி விட்டது.

    டிஜிட்டல் செய்திப் பிரிவு கடந்த 18 மாதங்களில் தொடர்ச்சியான வருவாய் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. லாண்டிற்கான செயல்பாட்டு வரம்பு 21.2 சதவீதமாக இருந்தது.  மொபைலை முதல்முறையாக பயன்படுத்தும் பயனர்களை கவரும் விதத்தில் புதுமையான செய்திகள்,  விரிவான  தலைப்புகள் ஆகியவற்றின் காரணமாகநெட்வொர்க் 18 டிஜிட்டல் செய்தியின் வளர்ச்சி என்பது YOY அடிப்படையில் 50 சதவீதத்திற்கும் மேல்  உயர்ந்தது.

    இணைய பயனர்கள் மத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் சென்றடைந்துள்ளதோடு பல்வேறு வகைகள் ( பொது செய்தி, நிதி சார்ந்த செய்தி, கிரிக்கெட் ) மற்றும் பல்வேறு மொழிகளில் இருப்பதன் மூலம் நெட்வொர்க் 18 இணையதளங்கள் பன்முகத்தன்மை வாய்ந்த பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும், விளம்பரதாரர்கள் தங்கள் நுகர்வோருடன் இணைவதற்கு ஏற்றதாகவும் விளங்குகிறது.

    நிதி செயல்திறன் குறித்து டிவி18 இன் தலைவர் அடில் ஜைனுல்பாய் கூறுகையில், "நாங்கள் வலுவான மற்றும் நிலையான ஊடக உரிமையை உருவாக்கி வருகிறோம், இது இந்திய பார்வையாளர்களுக்கு தரமான செய்திகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பங்குதாரர்களுக்கு மதிப்பையும் அளிக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாக நெட்வொர்க் 18 குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் இது லாபத்தை அதிகரிக்க உதவியதாகவும் தெரிவித்தார்.  ஊடகங்களில் செய்தி நுகர்வு அதிகரித்துவரும் சூழலில் நுகர்வோருக்கு அவர்களின் உள்ளூர் மொழியில் செய்தி, பொழுதுபோக்கு மற்றும் திரைப்பரங்கள் மற்றும் முன்னணி விளையாட்டு நிகழ்வுகளை வழங்கவும் வகையில் தளங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Network 18, News18 Network

    அடுத்த செய்தி