Home /News /business /

Netflix : ரூ.199 சந்தா திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்.. முழு விவரம்!

Netflix : ரூ.199 சந்தா திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்.. முழு விவரம்!

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

Netflix subscription : மாதம் ரூ.199 என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    இந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் தொகையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குறைத்தது. குறைந்தபட்ச மாதந்திர பிளான் ரூ.149 இல் இருந்து தொடங்குகிறது. ஆனால், இந்த பேஸ் பிளான் என்பது டேப்லட் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்களுக்கு மட்டுமே. ஸ்மார்ட் டிவி அல்லது லேப்டாப் போன்றவற்றில் இந்த பிளான் திட்டம் செல்லுபடி ஆகாது. இதற்கு பதிலாக மாதம் ரூ.199 என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    நெட்பிளிக்ஸ் ரூ.199 திட்டத்தில் என்ன கிடைக்கும்

    இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 480பி ரெஷொல்யூஷன் தரத்தில் ஒரு ஸ்கிரீனில் மட்டும் வீடியோக்களை பார்க்க முடியும். இதேபோன்று, நெட்பிளிக்ஸ் கண்டெண்ட் மற்றும் கேம் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரேயொரு டிவைஸ் மூலமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆக, ரூ.199 திட்டத்தின் மூலமாக உங்கள் மொபைல் மற்றும் டேப்லட் என இரண்டையும் இணைத்திருந்தீர்கள் என்றால், இரண்டிலும் ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியாது.

    இதையும் படிங்க.. விக்ரமின் ‘மகான்’ படத்துடைய கதை இதுதானா? எதிர்பார்ப்பை தூண்டும் ஓடிடி தளத்தின் பதிவு

    இதுத்தவிர்த்து மற்ற OTT பிளாட்ஃபார்களின் சந்தா பிளான்களை பற்றி பார்க்கலாம்.

    அமேசான் பிரைம் நிறுவனத்தின் ரூ.179 திட்டம்

    அமேசான் பிரைம் திட்டத்தில் இணைவதன் மூலமாக, அமேசானில் இலவச டெலிவரி மற்றும் அமேசான் மியூஸிக் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை கூடுதலாக கிடைக்கும். ஆண்டு சந்தா ரூ.999 இல் இருந்து ரூ.1,499 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.129 ஆக இருந்த மாத சந்தா ரூ.179 ஆக அதிகரித்துள்ளது. 3 மாத கால கட்டணம் ரூ.459 ஆக உள்ளது. ரூ.179 திட்டத்தில் இணைவதன் மூலமாக ஒரே சமயத்தில் 4 ஸ்கிரீன்களில் 4கே தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியும். இது டவுன்லோடு செய்யவும் அனுமதிக்கிறது.

    டிஸ்னி, ஹாட்ஸ்டார் ரூ.299 திட்டம்

    இதில் பேசிக் மொபைல் பிளான் திட்டம் ரூ.499 இல் தொடங்குகிறது. இது ஓராண்டு சந்தா ஆகும். வீடியோ குவாலிட்டி 720 பி தரத்தில் இருக்கும். ஆனால், இந்த திட்டத்தில் விளம்பரங்கள் உண்டு. விளம்பரம் இல்லா ப்ரீமியம் திட்டம் ரூ.299 என்ற விலையில் மாதாந்திர சந்தா அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    இதையும் படிங்க.. ஓடிடி ரிலீஸ் படங்கள்!

    சோனி லைவ் ரூ.299 திட்டம்

    சோனி லைவ் நிறுவனத்தில் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் ரூ.299 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இது தவிர, 6 மாத சந்தா ரூ.699 என்ற விலையிலும், ஆண்டு சந்தா ரூ.999 என்ற விலையிலும் அளிக்கப்படுகிறது.

    ஜீ5 திட்டங்கள்

    ஆண்டுக்கு ரூ.999 என்ற கட்டண அடிப்படையில் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. ரூ.299 க்கு 3 மாத சந்தா திட்டம் இருக்கிறது. இதில், ஒரே சமயத்தில் இரண்டு ஸ்க்ரீன்களில் வீடியோக்களை பார்க்கலாம். இதில் உள்ள வெப் சீரியஸ்களை பார்க்க தனியாக சப்ஸ்கிரிப்ஷன் செய்ய வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Amazon Prime, Netflix, OTT Release

    அடுத்த செய்தி