• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • டிஸ்னியின் அறிவிப்பால் 800 கோடி டாலரை இழந்த நெட்ஃபிளிக்ஸ்!

டிஸ்னியின் அறிவிப்பால் 800 கோடி டாலரை இழந்த நெட்ஃபிளிக்ஸ்!

நெட்ஃபிளிக்ஸ், வால்ட் டிஸ்னி

நெட்ஃபிளிக்ஸ், வால்ட் டிஸ்னி

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவையில் அதிக கட்டணத்தை நெட்ஃபிளிக்ஸ் வசூலிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதியதாக ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக வால்ட் டிஸ்னி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

    அமேசான், நெட்ஃபிளிக்ஸ்-க்கு போட்டியாக வரும் நவம்பர் மாதம் முதல் புதிய ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வால்ட் டிஸ்னி தொடங்க உள்ளது.

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான நெட்ஃபிளிக்ஸின் பங்குச்சந்தை மதிப்பு 800 கோடி டாலர் (இந்திய மதிப்பில் 55,356 கோடி ரூபாய்) சரிந்துள்ளது.

    ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவையில் அதிக கட்டணத்தை நெட்ஃபிளிக்ஸ் வசூலிக்கிறது. வால்ட் டிஸ்னி அதன் போட்டி ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளான அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸை விடக் குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை 5 சதவீதம் சரிந்ததையடுத்து, அதன் பங்குகளின் மதிப்பு 15250 கோடி டாலராக குறைந்தது. மறுபக்கம் வால்ட் டிஸ்னியின் பங்குகளின் மதிப்பு 2500 கோடி டாலர் அதிகரித்து 23500 கோடி டாலர் மதிப்புடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, வாரத்திற்கு 65 ரூபாய் கட்டணத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை அளிக்கும் ஆலோசனையில் நெட்ஃபிளிக்ஸ் உள்ளது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: