ஹோம் /நியூஸ் /வணிகம் /

மில்லியன் கணக்கில் புதிய வாடிக்கையாளர்கள்.. அசுர வளர்ச்சி.. அசத்தும் நெட்பிளிக்ஸ்!

மில்லியன் கணக்கில் புதிய வாடிக்கையாளர்கள்.. அசுர வளர்ச்சி.. அசத்தும் நெட்பிளிக்ஸ்!

நெட்ஃபிலிக்ஸ்

நெட்ஃபிலிக்ஸ்

திரைப்படங்களின் மீது அதிகமாக கவனம் செலுத்தும் அமேசான் ஒரு புறம் இருக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் சீரிஸ்களின் மீது அதிக கவனம் செலுத்தி சந்தாதாரர்களை கவர்ந்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை புதியதாக சேர்த்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அதன் பங்குதாரர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

  ஓடிடி சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனித்தனி ஓடிடி சேவையை ஆரம்பித்து அதற்கேற்றபடி கட்டணங்களை வசூலித்து வருகின்றனர். அதில் முன்னிலையில் இருப்பது அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் யார் முன்னிலை வகிப்பது என்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. திரைப்படங்களின் மீது அதிகமாக கவனம் செலுத்தும் அமேசான் ஒரு புறம் இருக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் சீரிஸ்களின் மீது அதிக கவனம் செலுத்தி சந்தாதாரர்களை கவர்ந்து வருகிறது.

  சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி இந்த இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை புதியதாக சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி ஆகும். இதன் மூலம் தற்பொழுது சந்தா செலுத்தி நெட்பிளிக்ஸின் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 223 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

  Read More : குறைந்த விலையில் நெட்பிளிக்ஸின் புதிய “Basic with ads” பிளான்! இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?

  நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “நம்முடைய மூன்றாவது காலாண்டில் (Q3) அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மிக வலுவான கதைகளும் கொண்டவையாகவும், மக்களை விரும்பி பார்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. முக்கியமாக ஆங்கிலத்தில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்(Stranger things) தொடரின் நான்காவது சீசன், மூன்றாம் காலாண்டில் வெளியிடப்பட்டது. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் ஒட்டுமொத்த பார்வை நேரம் மட்டுமே 1.35 பில்லியன் மணி நேரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது நெட்ப்ளிக்ஸின் சீரிஸ் வரலாற்றிலேயே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு நான்கு மொழிகளில் வெளியான தொடரின் அதிகபட்ச பார்வை நேரம் ஆகும்.

  இதற்கு அடுத்ததாக சேண்ட் மேன்(sand man) எனும் தொடர் ஒட்டுமொத்தமாக 351 மில்லியன் மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொடர்களுமே பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் நன்றாக கொண்டாடப்பட்டது. மேலும் நெட்பிளிக்ஸின் பங்குகளை வாங்கி உள்ள பங்குதாரர்களும் இதனால் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர். இதன் மூலம் நெட்ப்ளிக்ஸின் பங்குகள் சந்தையில் 15.5% அளவு அதிகரித்துள்ளது.

  மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டுக்கான (Q4) வருவாய் 7.8 பில்லியன் டாலர் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உலக சந்தையில் மற்ற நாடுகளின் கரன்சிகளை விட அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதும் ஒரு காரணமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்ற வருடத்தோடு கணக்கிடுகையில் அந்நிறுவனம் 9 சதவீத அளவு வளர்ச்சியை இந்த ஆண்டில் மட்டும் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Netflix