கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ஜப்பான்?

news18
Updated: April 30, 2019, 3:35 PM IST
கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ஜப்பான்?
நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா
news18
Updated: April 30, 2019, 3:35 PM IST
கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியாவிற்கு ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாடியா குழுமத்தின் தலைவரான நெஸ் வாடியா இந்தியாவில் பிரிட்டானியா பிஸ்கட், பாம்பே டையிங், கோஏர் விமான நிறுவனம் போன்ற வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா தனது பாக்கெட்டில் 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த விசாரணையில் தனது சொந்த பயன்பாட்டிற்காக தான் கஞ்சா வைத்திருந்தாக வாடியா கூறியுள்ளார். ஜப்பானில் கஞ்சாவிற்குத் தடை உள்ளதால் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் ‘சஸ்பண்டட் ஜெயில்’ என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சஸ்பண்டட் ஜெயில் என்றால் பொதுவாக மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 5,00,000 யென் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த தண்டனை அடுத்த முறை இவர், இதே குற்றத்தை மீண்டும் செய்யும் போது தான் அமலுக்கு வரும்.

தற்போது நெஸ் வாடியாவிற்கு வழங்கியுள்ள தீர்ப்பின் படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை என கூறப்பட்டாலும், அடுத்த 5 ஆண்டுகளில் இவர் ஏதாவது குற்றம் செய்தால் மட்டுமே சிறைக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்க்க:
First published: April 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...