ஹோம் /நியூஸ் /வணிகம் /

நாளை 14 மணி நேரத்துக்கு வங்கிகளின் நெஃப்ட் சேவை இயங்காது!

நாளை 14 மணி நேரத்துக்கு வங்கிகளின் நெஃப்ட் சேவை இயங்காது!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் (RTGS ) பணப் பரிவர்த்தனை சேவை வழக்கம் போல இயங்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

  • 1 minute read
  • Last Updated :

ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் காரணமாக  நாளை 14 மணி நேரத்துக்கு  அனைத்து வங்கிகளின் நெஃப்ட் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு  வங்கித் தொடர்பான சேவைகள் எளிதாக கிடைக்க ஏதுவாக ஆன்லைன் சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. குறிப்பாக நெஃப்ட் ( NEFT) எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும்.

தொடக்கத்தில், வங்கி வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடிந்தது. பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  முதல்  வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவையை பயன்படுத்தும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

இந்நிலையில், நெஃப்ட் சேவையில் மேலும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை  மேற்கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக, இன்று இரவு 12 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரையிலான 14 மணி நேரத்துக்கு  வங்கிகளின் நெஃப்ட் சேவையை பயன்படுத்த முடியாது  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதேவேளை வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் (RTGS ) பணப் பரிவர்த்தனை சேவை வழக்கம் போல இயங்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று இரவு 12 மணி முதல் நாளை 2 மணி வரை  ஆன்லைன்  பேங்கிங், யோனோ, யோனோ லைட் மூலம் நெஃப்ட் சேவையை  பெற முடியாது என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் பணையம்

First published:

Tags: Reserve Bank of India