Home /News /business /

NEFT, RTGS பரிமாற்றம்..பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்கவில்லை எனில் வங்கிக்கு அபராதம்!

NEFT, RTGS பரிமாற்றம்..பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்கவில்லை எனில் வங்கிக்கு அபராதம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

NEFT, RTGS | ரிசர்வ் வங்கியின் விதியின் படி, ஒரு வேளை நீங்கள் NEFT- RTGS யை அனுப்பிய பணம் உரிய நபர்களுக்கு சென்றடையாவிடில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வங்கி வட்டியுடன் அபராதம் வழங்க வேண்டுமாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    NEFT மற்றும் RTGS மூலம் பணப்பரிமாற்றம் செய்த 2 மணி நேரத்திற்கு மேலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாவிட்டால், எந்த வங்கியிலிருந்து பணம் அனுப்பினோமோ? அந்த வங்கி தங்களது வாடிக்கையாளருக்கு வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இன்றைக்கு மணிக்கணக்கில் வங்கியில் காத்திருத்துப் பணம் டெபாசிட் செய்யவோ? பணம் அனுப்பவோ? பலருக்கு நேரம் இருக்காது. ஆனால் ஒரு ஸ்மாரட்போன் இருந்தால் போதும், அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் நொடியில் நீங்கள் வீட்டில் இருந்தே செய்துவிடும் அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மக்களிடம் அதிகரித்துவிட்டது. இப்படி அசுர வளர்ச்சிக் கண்டுள்ள ஆன்லைன் பரிவர்த்தனையைத் தான் இந்தியாவில் 91 சதவீத இந்தியர்கள் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றது. இதில் NEFT- RTGS தான் மக்களிடம் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள ஆன்லைன் பரிவர்த்தனையாக உள்ளது.

    நண்பர்கள், உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது முதல் தொழில்ரீதியாக என யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் NEFT- RTGS யைத் தான் நாம் தேர்வு செய்கிறோம். ஆனால் சில சமயங்களில் பணம் தாமதமாக அல்லது சென்றடையாமல் கூட போய்விடும். இது போன்ற சூழலில் வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான விதியை நடைமுறையில் கொண்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் விதியின் படி, ஒரு வேளை நீங்கள் NEFT- RTGSயில் அனுப்பிய பணம் உரிய நபர்களுக்கு சென்றடையாவிடில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வங்கி வட்டியுடன் அபராதம் வழங்க வேண்டுமாம்.

    முதலீடு அல்லது காப்பீடு... எதிர்கால வாழக்கைக்கு சிறந்தது எது?


    NEFTன் மூலம் அனுப்பப்படும் பணம் 2 மணிநேரத்தில் பயனாளியின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் சில காரணங்களால் பணம் கிரெடிட் செய்யப்படாமல் இருக்கும். எனவே NEFT பரிவர்த்தனை பணம் பேட்ச் செட்டில்மென்ட் முடிந்த 2 மணி நேரத்திற்குள் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், வங்கி வாடிக்கையாளருக்கு அதாவது பணத்தை அனுப்பியவருக்கு வட்டியுடன் அபராதம் செலுத்த வேண்டும். தற்போதைய RBI LAF ரெப்போ விகிதம் 4.90 சதவீதம் மற்றும் அபராதம் 2 சதவீதம் என 6.90 சதவீதம் வட்டியோடு அபராதமாக வங்கி செலுத்த வேண்டும்.

    இது போன்று RTGSன் பொது விதி, பணத்தை நிகழ்நேரத்தில் அனுப்ப வேண்டும். ஆனால் எந்த பயனாளியின் வங்கியில் பணம் மாற்றப்படுகிறதோ? அந்த வங்கி அரை மணி நேரத்தில் அந்த பணத்தை பயனாளியின் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். இல்லையென்றால் பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பணப் பரிமாற்றம் செய்பவரின் கணக்கில் பணம் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். ஒருவேளை பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றால், NEFT யைப் போல RTGS லும் அபாராம் விதிக்க வழிவகை உள்ளது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதம் மற்றும் அபராதம் 2 சதவீதம் என 6.90 வட்டியோடு அபராதமாக வங்கி செலுத்த வேண்டும்.

    இப்பிரச்சனை குறித்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் அளித்தாலும், அளிக்காவிடிலும் அவர்களுக்கு அபராதத் தொகை மற்றும் வட்டியோடு பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டும் என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஒருவேளை NEFT மற்றும் RTGS மூலம் சரியான நேரத்தில் பணப்பரிமாற்றம் செய்யப்படாமல் மற்றும் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படாவிட்டால், வாடிக்கையாளர்கள் தனது வங்கி அல்லது அவரது கிளையில் புகார் செய்யலாம்.

    மேலும், https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/RBIOS2021_121121.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும். வங்கி மின்னஞ்சல் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம். குறிப்பாக மறக்காமல் தங்களது புகாரில் UTR எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Money, Savings

    அடுத்த செய்தி