Home /News /business /

அவசரமாக பணம் தேவையா..? கடன் வாங்க பாதுகாப்பான வழிகள்... அவசியம் படிங்க

அவசரமாக பணம் தேவையா..? கடன் வாங்க பாதுகாப்பான வழிகள்... அவசியம் படிங்க

பணம் - மாதிரிப்படம்

பணம் - மாதிரிப்படம்

நீங்கள் நீண்ட கால கடனை பெற நினைக்கிறீர்கள் என்றால், LAP கடன் முறையை தேர்வு செய்வது சரியாக இருக்கும்.

  எப்போதும், எந்த நேரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடியது அவசரகால பண தேவைகள். அவசர மற்றும் ஆபத்து காலங்களில் ஏற்படும் திடீர் பண தேவைகளை பூர்த்தி செய்ய எல்லோருக்குமே சரியான ஒரு வழியாக இருப்பது பாதுகாப்பான கடன்களை (Secured loans) பெறுவது எப்படி என்பதை தெரிந்து வைத்திருப்பதே. செக்யூர்ட் லோன்களில் குறைந்த அளவிலேயே கிரெடிட் ரிஸ்க் உள்ளது.

  கடன் வழங்குநர்கள் கடன் கோருபவரின் விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர்களுக்கு மிகவும் நிதானமான அணுகுமுறையை பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பற்ற கடன் விருப்பங்களுடன் ஒப்பிடும் போது பொதுவாக பாதுகாக்கப்பட்ட கடன்கள் (Secured loan) குறைந்த வட்டி விகித விருப்பத்துடன் கிடைக்கின்றன. இது கடன் வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான விருப்பமாக இருக்கிறது. கீழே சில பாதுகாப்பான கடன் விருப்பங்களை பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சொத்துக்கு எதிரான கடன் (Loan Against property - LAP):

  சொத்துக்கு எதிரான கடன் என்பது அடமான கடன். எந்தவொரு குடியிருப்பு, தொழில்துறை அல்லது வணிகச் சொத்தையும் அடமானத்தில் வைத்து அதற்கேற்ப கடன் தொகையை பெற்று கொள்ள முடியும். நீங்கள் நீண்ட கால கடனை பெற நினைக்கிறீர்கள் என்றால், LAP கடன் முறையை தேர்வு செய்வது சரியாக இருக்கும். ஏனென்றால் LAP முறையில் கடனை திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் வரை கொடுக்கப்படுகிறது. ஒரு சில கடன் வழங்குநர்கள் 20 ஆண்டு காலம் வரை கடனை திருப்பி கொடுக்க கால அவகாசம் வழங்குகிறார்கள். தற்போதைய சொத்து மதிப்பில் 50% முதல் 70% வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. சொத்துக்கு எதிரான கடனை பெற 2-3 வாரங்கள் ஆகலாம் என்பதால் உடனடியாக பணம் தேவைப்படும் நபர்களுக்கு சரியான தேர்வாக இருக்காது.

  பத்திரங்களுக்கு எதிரான கடன் (Loan Against Securities):

  திடீரென ஏற்படும் பண நெருக்கடியை சமாளிக்க உங்கள் சந்தை முதலீடுகளான பத்திரங்கள், ஷேர்கள், பரஸ்பர நிதிகள், என்.எஸ்.சி, லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி போன்றவற்றை அடகு வைத்து கடன் வாங்கலாம். பாதுகாப்பான கடன் விருப்பங்களில் ஒன்றான பத்திரங்களுக்கு எதிரான கடன் பெரும் முறையை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் வட்டி, போனஸ் மற்றும் பிற சலுகைகளை தொடர்ந்து பெறலாம். பத்திரங்களுக்கு எதிரான கடன்கள் முன்பே தீர்மானிக்கப்பட்ட கடன் வரம்புடன் ஓவர் டிராஃப்ட் ஃபெசிலிட்டி வடிவத்தில் வருகின்றன. கடனை திருப்பி செலுத்தும் நடைமுறையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நெகிழ்வு தன்மையை வழங்குகிறது.

  டாப்-அப் கடன் (Top-Up Loan):

  ஒரு சிறந்த கிரெடிட் ஹிஸ்ட்ரியை கொண்ட தற்போதைய ஹோம் லோன் கொண்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த விருப்பம் இது. டாப் அப் லோன் என்பது ஏற்கனவே ஹோம் லோனை செலுத்தி வரும் ஒரு நபரால் மட்டுமே பெற முடியும்.இந்த கடன் முறையில் எல்டிவி விகிதம் (LTV ratio), கடன் தொகையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. டாப்அப் லோனுக்கு பிறகு நிலுவையில் உள்ள மொத்த வீட்டுக் கடன் தொகை முதலில் வழங்கப்பட்டபோது கடனின் எல்டிவி விகிதத்திற்குள் இருக்க வேண்டும்.

  Also read... தங்க நகைக்கடன் Vs பர்சனல் லோன் - இரண்டில் சிறந்தது எது?

  முதலில் அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன் தொகை மற்றும் இன்னும் நிலுவையில் உள்ள கடன் தொகை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் ஒரு டாப்-அப் லோனை கடன் வழங்குநர்கள் தருகிறார்கள். டாப்-அப் லோன் காலம் அசல் வீட்டுக் கடனின் மீதமுள்ள காலத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கடனின் தொடக்கத்தில் LTV ratio 70 சதவீதமாக இருந்தால், டாப்-அப் லோன் ஒப்புதலுக்குப் பிறகு டாப்-அப் லோன் உட்பட நிலுவையில் உள்ள அசல் தொகை 70% விட அதிகமாக இருக்க கூடாது. பொதுவாக, டாப்-அப் லோனுக்கான ஒப்புதல் 1 முதல் 2 வாரங்கள் வரை ஆகலாம்.

  தங்கக் கடன் (Gold Loan):

  திடீர் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய பாதுகாப்பான கடனின் மற்றொரு வழியாக இருக்கிறது கோல்டு லோன். விண்ணப்பித்த சில மணிநேரங்களுக்குள் கோல்டு லோன் கிடைக்கும் வழிகள் இருப்பதால் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்ய இந்த லோனை தேர்வு செய்யலாம். பொதுவாக கோல்டு லோன்கள் 3 ஆண்டுகள் வரை திருப்பி கொடுக்கும் காலத்துடன் வந்தாலும், சில கடன் வழங்குநர்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை வழங்குகிறார்கள். குறைந்தபட்சம் 18 காரட் தூய்மை தங்கமாக இருப்பின் தங்க மதிப்பில் 75 சதவீதம் வரை லோன் கிடைக்கும். அதே போல கோல்டு லோன் வாங்குபவர்கள் முதலில் வட்டித் தொகையையும், திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு பிறகு அசல் தொகையையும் செலுத்த அனுமதிக்கிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Bank Loan, Gold loan

  அடுத்த செய்தி