ஹோம் /நியூஸ் /வணிகம் /

மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

வணிகம்

வணிகம்

நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு வரை நீங்கள் ஓவர் டிராஃப்ட் செய்து பணம் எடுக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு அவரவர் சூழலுக்கு ஏற்ப பணத்தேவைகள் என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அன்றாட கூலி வேலைக்குச் செல்பவர்களிடம் கூட கையில் கொஞ்சம் பணம் இருக்கும். ஆனால் மாத சம்பளம் வாங்குவோரின் நிலை என்பது மிகவும் மோசமானது. சம்பளம் வந்த 10 நாள்களில் இஎம்ஐ, லோன், சேமிப்பு, குடும்பத்தேவைகள் என அனைத்திற்கும் செலவாகிவிடும். வங்கியில் மினிமம் பேலன்ஸ் இருந்தால் கூட அவசர தேவைகளுக்கு நாம் அதையும் பயன்படுத்தி விடுவோம்.

இந்த சூழலில் உங்களுக்குப் பணம் தேவைப்படும் பொழுது, உங்களுடைய வங்கிக் கணக்கு காலியாக இருந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்? நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பணம் கிடைக்குமா? என தேடி அலைவீர்கள். ஒரு சிலரோ லோன் எதுவும் கிடைக்குமா? என தேடி அலைவார்கள். இனி அந்த கவலை வேண்டாம்..நீங்கள் சம்பளம் பெறக்கூடிய உங்களது வங்கிக்கணக்கு காலியாக இருந்தாலும் இனி நீங்கள் அதிலிருந்து 3 மடங்கு வரை பணம் எடுக்க முடியும். ஆம் ஓவர் டிராஃப்ட் என்ற வசதியின் மூலம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் உங்களது சம்பளக் கணக்கிலிருந்து 3 மடங்கு வரை பணம் எடுக்க முடியுமாம்…

ஓவர் டிராஃப்ட் என்றால் என்ன?..

நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு வரை நீங்கள் ஓவர் டிராஃப்ட் செய்து பணம் எடுக்கலாம். உதாரணமாக மாத சம்பளம் ரூபாய் 50 ஆயிரம் என்றால் நீங்கள்1.5 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் செய்துக் கொள்ளலாம். அதே சமயம் இந்த குறுகிய கால கடனுக்கு நீங்கள் கொஞ்சம் வட்டி இதற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

Read More : வருமான ஆதாரம் தொடர்பான ஆவணங்கள் இல்லாமல்கூட நீங்க வங்கி லோன் பெறலாம்! - எப்படி தெரியுமா?

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களைச் சமாளிக்க சிறிய கடனை எடுக்க உதவுகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளின் ஓவர் டிராஃப்ட் வசதிகளைப் பயன்படுத்தக்கூடிய நடைமுறை உள்ளது. இதன் மூலம் பணம் பெறும் போது 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.

இந்த ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கு வங்கிக்கு செல்லலாம், அல்லது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். சில வங்கிகள் தங்களது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் சிலருக்கு இந்த வசதியைத் தானாக வழங்குகின்றன. இல்லையென்றாலும் கவலை வேண்டாம். நீங்கள் வங்கிக்கொண்டு நேரடியாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

First published:

Tags: Bank, Bank Loan, Loan