ஒரே நேரத்தில் 92,700 BSNL, MTNL ஊழியர்கள் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம்!

நஷ்டத்தை ஈடுகட்ட ஊழியர்களைக் குறைக்கும் பணியை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 92,700 BSNL, MTNL ஊழியர்கள் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம்!
பி.எஸ்.என்.எல்
  • News18
  • Last Updated: December 4, 2019, 10:44 PM IST
  • Share this:
பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான BSNL மற்றும் MTNL-ல் பணியாற்றும் 92,700 ஊழியர்கள் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

விஆர்எஸ் கேட்டு விண்ணப்பம் செய்தத்தில் 78,300 BSNL ஊழியர்கள் மற்றும் 14,378 MTNL ஊழியர்கள் உள்ளனர். இதுகுறித்து BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புர்வார் கூறுகையில், “இதுவரையில் 78,300 BSNL ஊழியர்கள் விஆர்எஸ் கோரியுள்ளனர். எங்களது குறிக்கோளின் அடிப்படையில் 82,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டிருந்தோம்.

விஆர்எஸ் விண்ணப்பங்கள் போக 6 ஆயிரம் BSNL ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். விஆர்எஸ் விண்ணப்பிக்க டிசம்பர் 3-ம் தேதி வரையில் காலக்கெடு வைக்கப்பட்டிருந்தது” என்றார். தற்போது MTNL நிறுவனத்தின் கீழ் 4,430 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இது நிர்வாகத்தை நடத்த போதுமான எண்ணிக்கை என MTNL தலைவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.


BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால் பல மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியமே வழங்கப்படவில்லை என்ற புகார் இருந்து வந்தது. இந்நிலையில் நஷ்டத்தை ஈடுகட்ட ஊழியர்களைக் குறைக்கும் பணியை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் பார்க்க: ஊதிய நாள்.. பணப்பரிமாற்றம்.. 2வது நாளாக முடங்கிய ஹெச்டிஎப்சி இணையதளம்
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading