செப்டம்பரில் அதிகரித்த நாட்டின் ஏற்றுமதி - ₹ 2.1 லட்சம் கோடியாக உயர்வு

நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டில் 2.1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

செப்டம்பரில் அதிகரித்த நாட்டின் ஏற்றுமதி - ₹ 2.1 லட்சம் கோடியாக உயர்வு
கோப்புப்ப்படம்
  • Share this:
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நடப்பாண்டு செப்டம்பரில், ஏற்றுமதி 5.27 சதவீதம் உயர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி 2.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இரும்புத்தாது, அரிசி உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இரும்புத்தாது 109 சதவீதமும், அரிசி 92 சதவீதமும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைத்தவிர இறைச்சி, பால், பருத்தி, புகையிலை, ரசாயனம் ஆகிய பொருட்களின் ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன.Also read: அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடக்கம்


செப்டம்பரில் நாட்டின் எண்ணெய் இறக்குமதி 35 விழுக்காடு குறைந்து 44,000 கோடி ரூபாயாக உள்ளது. எண்ணெய் சாரா பொருட்களின் இறக்குமதியும் 14 சதவீதம் சரிந்து, ஒரு 1.88 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தங்கம் இறக்குமதியும் 52 சதவீதம் சரிந்துள்ளது.
First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading