ஹோம் /நியூஸ் /வணிகம் /

தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஆன்லைனில் தொடங்குவது இவ்வளவு ஈஸியா! மத்திய அரசின் புதிய அப்டேட்

தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஆன்லைனில் தொடங்குவது இவ்வளவு ஈஸியா! மத்திய அரசின் புதிய அப்டேட்

தேசிய ஓய்வூதியம்

தேசிய ஓய்வூதியம்

சிஆர்ஏ தளத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்து இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள அக்கவுண்டில் அட்ரஸ் அப்டேட் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) அனுமதி அளித்துள்ளது.

  டிஜிலாக்கர் என்பது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் ஆவணக் காப்பகம் ஆகும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  ஓட்டுநர் உரிமம், பள்ளி மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை உள்பட பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களில் உள்ள தகவல்களை டிஜிட்டல் ரீதியாக சரிபார்க்க இது உதவிகரமாக அமைகிறது. டிஜிலாக்கரில் உள்ள ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி, என்பிஎஸ் அக்கவுண்ட் திறப்பது எப்படி என்பது குறித்து ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

  பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை உயர்த்திய அரசு வங்கி..விட்ராதீங்க!

  ப்ரோடீன் சிஆர்ஏ தளத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்து இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

  டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி என்பிஎஸ் அக்கவுண்ட் திறப்பது எப்படி?

  1. ப்ரோடீன் சிஆர்ஏ தளத்திற்கு சென்று என்பிஎஸ் ரெஜிஸ்ட்ரேசன் பக்கத்திற்கு செல்லவும். அங்கு, ட்ஜிலாக்கர் ஆவணங்களைப் பயன்படுத்தி ரெஜிஸ்ட்ரேசன் செய்து கொள்வதற்கான ஆப்சனை கிளிக் செய்யவும். அங்கு வழங்கப்படும் தேர்வுகளில் ஓட்டுநர் உரிமம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

  2. இதை தொடர்ந்து, தாமாகவே டிஜிலாக்கர் இணையதளத்திற்கு செல்லும். அங்கு உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்து, உங்கள் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை கொடுக்கவும்.

  3. டிஜிலாக்கர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்திக் கொள்ள என்பிஎஸ் கட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கவும். இதைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள உங்களின் ஃபோட்டோ மற்றும் இதர தகவல்கள் என்பிஎஸ் அக்கவுண்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

  4. இதை தொடர்ந்து பான் காட்டு, வங்கி அக்கவுண்ட் புக், வாரிசு நியமனதாரர் போன்ற விவரங்கள் கோரப்படும். அவற்றையும் உள்ளீடு செய்ய்யவும்.

  5. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி என்பிஎஸ் அக்கவுண்ட் திறந்து கொள்ளலாம்.

  ஹெல்த் இன்ஷூரன்ஸ் மீது குவியும் புகார்கள்! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

  அட்ரஸ் மாற்றம் செய்ய...

  1. ப்ரோடீன் சிஆர்ஏ தளத்தில் உங்கள் விவரங்களை குறிப்பிட்டு என்பிஎஸ் அக்கவுண்ட் உள்ளே லாகின் செய்யவும்.

  2. தனி விவரங்களை அப்டேட் செய்வதற்கான மெனுவை தேர்வு செய்யவும்.

  3. அட்ரஸ் அப்டேட் என்பதை தேர்வு செய்து, அதில் டிஜிலாக்கர் ஓட்டுநர் உரிமம் மூலமாக அப்டேட் செய்வதற்கான வாய்ப்பை தேர்வு செய்யவும்.

  4. டிஜிலாக்கர் தளத்திற்கு ரீடேரக்ட் செய்யப்படும். அங்கு லாகின் விவரங்களை குறிப்பிட்டு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கவும்.

  5. டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்களை ஆக்சஸ் செய்ய என்பிஎஸ் கட்டமைப்பிற்கு அனுமதி கொடுக்கவும்.

  இப்போது உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் உள்ளபடி என்பிஎஸ் அக்கவுண்ட் அப்டேட் ஆகியிருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Govt Scheme, National Pension Scheme, Pension Plan, Savings