முகப்பு /செய்தி /வணிகம் / National pension scheme: தனியார் நிறுவன ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள் இது தான்!

National pension scheme: தனியார் நிறுவன ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள் இது தான்!

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

இத்திட்டத்தில் பதிவு செய்யும் நபர்கள் எந்த நேரத்திலும் நிறுவனத்தை விட்டு வெளியேறினால், ஊழியர்கள் தங்களது முதலீட்டு விருப்பங்களை மாற்றிக் கொள்ள முடியும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களது ஓய்வுக்காலத்திற்கு பிறகு எவ்வித பயமும் இன்றி வாழ்க்கைத் தொடர தேசிய ஓய்வூதிய திட்டம் மிகுந்த பலனளிக்கும் என்கின்றனர் பொரளாதார வல்லுநர்கள்.

அரசு பணியில் உள்ளவர்களுக்கே பென்சன் இல்லை என்ற சூழலில், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறித் தான். தன்னுடைய ஓய்விற்குப் பிறகு அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம்? என்ற மனநிலையில் உள்ளவர்களுக்காக மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட் ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம் என இத்திட்டத்தை விரிவுபடுத்தியது. முன்னதாக கடந்த 2004ல் மத்திய ஊழியர்களுக்காக மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் தகுதியான கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் சம்பளம் பெறும் பணியாளர்கள் தங்கள் ஓய்வு காலத்தைத் திட்டமிட இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. எனவே இந்நேரத்தில் தனியார் துறை ஊழியர்கள் எப்படி இதில் பங்களிப்பை செலுத்த முடியும்? மற்றும் நன்மைகள் குறித்து விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

பங்களிப்பு செயல்முறை : தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த நிதியாண்டிற்கான பங்களிப்யை தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல பலன் பெறலாம். பொதுவாக கார்ப்பரேட் மாதிரியின் கீழ், தனியார் நிறுவன முதலாளி மற்றும் பணியாளர்களின் சமமான பங்களிப்பு, முதலாளி அல்லது பணியாளர்களிடமிருந்து பங்களிப்பு என பலவற்றில் உங்களது பங்களிப்பை செலுத்தலாம்.

Also Read : கார்ப்பரேட் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய உண்மைகள் என்னென்ன தெரியுமா.?

இதோடு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்ச பங்களிப்பை நீங்கள் செலுத்த வேண்டும். குறைந்த பட்ச டெபாசிட் தொகை ரூ. 500.. அதே சமயம் NPS ல் மாதாந்திர பங்களிப்பை தனியார் நிறுவன ஊழியர்கள் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதோடு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன முதலாளிகள் பங்களிப்புகளைத் தவிர தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் பங்களிப்புகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் பணியாளர்களுக்கு வரிச்சலுகையும் உள்ளது. எனவே எவ்வித அச்சமின்றி உங்களது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாளர்கள் இணைந்து கொள்ளலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கார்ப்பரேட்டுகள் Points of Presence ( POP) மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஒழுங்கு முறை ஆணையம் நிர்வகித்து வரும் நிலையில், இத்திட்டத்தில் பதிவு செய்யும் நபர்கள் எந்த நேரத்திலும் நிறுவனத்தை விட்டு வெளியேறினால், ஊழியர்கள் தங்களது முதலீட்டு விருப்பங்களை மாற்றிக் கொள்ள முடியும்.

First published:

Tags: Jobs, National Pension Scheme, Savings