வேலை பார்க்கும் இந்திய குடிமக்கள் பலரும் பணத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், ஆபத்து இல்லாத வருமானத்தை அளிக்கவும் உதவும் வகையிலும் உள்ள பல திட்டங்களை தங்கள் எதிர்காலத்திற்காக தேடுகிறார்கள். குறிப்பாக ஓய்வு பெற்ற பிறகு நிலையான எதிர்காலத்தை விரும்பும் மக்கள் தனியார் மற்றும் அரசு துறைகளில் பல வகையான முதலீடுகளை அணுக மக்கள் விரும்புகிறார்கள்.
இவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் தான் நேஷ்னல் பென்ஷன் ஸ்கீம் (NPS - National Pension System) ஆகும். அரசு ஊழியர்களுக்காக மட்டும் முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை மத்திய அரசு இப்போது தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கும், தானாக முன்வந்து அதைத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீட்டித்துள்ளது. NPS-ல் இணையும் சந்தாதாரர்கள் தங்கள் பணிக்காலத்தின் போது முறையான சேமிப்பின் மூலம் அவர்களின் எதிர்காலம் குறித்து உகந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
NPS மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக உள்ளது. தனிநபர்கள் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானத்தை திரும்பப் பெற மாதாமாதம் பணம் கட்டலாம். NPS-ஆனது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் இந்திய அரசாங்கத்தால் கூட்டாக வழங்கப்படுகிறது.
pm kisan update : ரூ. 2000 பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 12வது தவணை கிடைக்க இதை செய்ய வேண்டும்
NPS திட்டத்தில் சேருவதற்கான தகுதி:
* இந்தியாவின் எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் (குடியிருப்பு மற்றும் குடியுரிமை அல்லாதவர்கள்)
* விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியின்படி 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்
* விண்ணப்பதாரர் திட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட KYC விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்
NPS கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி.?
* NPS கால்குலேட்டரை பயன்படுத்த, முதலில் https://www.npstrust.org.in/content/pension-calculator என்ற லிங்கிற்கு செல்லவும்.
* அடுத்து உங்கள் பிறந்த தேதியை என்டர் செய்ய வேண்டும்
* இப்போது உங்கள் மாதாந்திர பங்களிப்பு தொகையை மற்றும் எந்த வயது வரை நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை என்டர் செய்யவும்
Link PAN Aadhaar : ஜூலை 1ம் தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால் ரூ. 500 அபராதம்!
* முதலீடு மற்றும் வருடாந்திர வருவாயில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை என்டர் செய்யவும்
இவை அனைத்தையும் முடிந்த பிறகு, உங்கள் மாதாந்திர பென்ஷன், வருடாந்திர மதிப்பு மற்றும் மொத்த தொகை ஆகியவற்றை பற்றிய தகவலை கம்ப்யூட்டரில் பார்க்கலாம்.
NPS திட்டத்தின் கீழ் ரூ.50,000 பென்ஷன் பெறுவது எப்படி.?
ஒரு நபர் தன்னுடைய 25 வயதில் NPS-ல் சேர்ந்து மாதத்திற்கு ரூ.6,500 பங்களிக்கத் தொடங்கினால் அவர் ஓய்வு பெறும் வரை அவருடைய மொத்த NPS பங்களிப்பு ரூ.27.30 லட்சமாக இருக்கும். இதோடு ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் 10% வருமானம் கிடைத்தால், மொத்த முதலீடு ரூ.2.46 கோடியாக உயரும். மேலும் NPS சந்தாதாரர் கார்பஸின் (corpus) 40 சதவீதத்தை வருடாந்திரமாக மாற்றினால், அதன் மதிப்பு ரூ.99.53 லட்சமாக மாறும். வருடாந்திர வீதம் 10% என்று வைத்துக் கொண்டால், மாத ஓய்வூதியம் ரூ.49,768 வரை இருக்கலாம். தவிர இதன் படி செயல்படும் NPS சந்தாதாரர் சுமார் ரூ.1.50 கோடியை மொத்தமாக பெறுவார்.
NPS-ன் பலன்கள்:
* மிக குறைந்த விலை ஓய்வூதிய திட்டமாக இருக்கிறது NPS. இதில் நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் நிதி மேலாண்மைக் கட்டணங்களும் மிக குறைவு.
* எளிமையானது: நாடு முழுவதுமுள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவும் நடத்தப்படும் POP-களில் ஏதேனும் ஒன்றில் அக்கவுண்ட்டை ஓபன் செய்து நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணை (PRAN) பெற வேண்டும்.
* விண்ணப்பதாரர் தனது சொந்த முதலீட்டு விருப்பம் மற்றும் ஓய்வூதிய நிதியை தேர்வு செய்யலாம் அல்லது சிறந்த வருமானத்தை பெற ஆட்டோ தேர்வையும் பரிசீலிக்கலாம்.
* விண்ணப்பதாரர் நாட்டில் எங்கிருந்தும் ஒரு அக்கவுண்ட்டை ஆப்ரேட் செய்யலாம். விண்ணப்பதாரர் பதிவு செய்த POP-SP கிளையைப் பொருட்படுத்தாமல், நகரம், வேலை போன்றவற்றை மாற்றினாலும், எந்த POP-SP-க்கள் மூலமாகவும் தங்களது பங்களிப்புகளை தொடர்ந்து செலுத்தலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.