முகப்பு /செய்தி /வணிகம் / பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!

பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!

பென்சன்

பென்சன்

செப்டம்பர் 1, 2022 முதல் அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேரடி ரெமிட்டன்ஸ் மற்றும் பாயிண்ட் ஆஃப் பிரசன்ஸ் என்ற இந்த இரண்டு விஷயங்களில் தேசிய பென்ஷன் ஆணையம் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், நாடு முழுவதும் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்கி வருபவர்களுக்கு, புதிய விதிகளை அறிவித்துள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு புதிய மாறுதல்களை அமல்படுத்திய தேசிய ஓய்வூதிய ஆணையம், தற்போது, நேரடி பங்களிப்பு மற்றும் புதிய பென்ஷன் கணக்குகளுக்காக POPஸ்கு (பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்) ஆதரவளிக்கும் வகையில் தனது கமிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்.

பேங்கில் அக்கவுண்ட் தொடங்க இனி ஆதார், பான் அவசியமில்லை.. வரப்போகிறது CKYC முறை!

டி-ரெமிட்டன்ஸ் (Direct remittance) என்ற புதிய அம்சம், ஓய்வூதிய அமைப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள், தாங்களே வழங்கும் பங்களிப்புகளை, மேற்கொள்ளலாம். இதற்கு, சந்தாதாரர்கள் தங்களின் PRAN எண்ணுடன் ஒரு ஸ்ட்டாடிக் விர்ச்சுவல் ஐடியை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைத்திருந்தால், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பென்ஷன் கணக்குக்கு வாலண்டியராக பங்களிக்கலாம்.

POPஸ் (Point of Presence) என்பவர்கள், பென்ஷன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், அவர்களுடைய பரிவர்த்தனைகளை எளிதாக்கி, தடையில்லாமல் செயல்படுத்த உதவுபவர்களைக் குறிக்கிறது. அது மட்டுமில்லாமல், பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர்களை சேர்க்கவும், அவர்கள் ஓய்வுதியக் கணக்கிற்கு தொடர்ந்து பங்களிப்பதையும் உறுதி செய்கிறார்கள்.

YES BANK : அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் ஏடிஎம் வரை கட்டணத்தை திருத்திய யெஸ் வங்கி!

இந்த POPகளை ஊக்குவிக்க, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய பென்ஷன் சேவை வழியாக கமிஷன் வழங்க அனுமதி அளித்துள்ளது. ஓய்வூதிய நிதி நிர்வாகி, PoPகளால் ஆன்போர்டு செய்யப்பட்ட சந்தாதாரர்கள், டி-ரெமிட்டன்ஸ் (நேரடி பணம் செலுத்துதல்) வழியாக தேசிய பென்ஷன் திட்டத்துக்கு (NPS) வழங்கப்படும் பங்களிப்புகள், ஆன்லைன் பங்களிப்புக்கு (eNPS) சமமாக கருதப்படும் என்று தெளிவு படுத்தியுள்ளார். இதுவும் மற்றொரு வகையான ஆன்லைன் பங்களிப்பு தான்.

eNPS உடன் ஒப்பிடும் வகையில், தொடர்புள்ள சந்தாரர்கள் மேற்கொண்ட டி-ரெமிட்டன்ஸ் பங்களிப்புகளில், அந்தந்த POPகளுக்கான கமிஷன், 0.20 சதவிகித நன்கொடையாக இருக்க வேண்டும். (15 முதல் 10,000 வரை).

இந்த டிரைல் கமிஷனைப் பற்றி வெளியான அறிக்கையில் “POPகள், தேசிய பென்ஷன் திட்டத்துக்கு தீவிரமாக உழைத்து வருகிறார்கள். NPS திட்டத்தில் பயனாளர்களை சேர்க்கவும், அவர்கள் தொடர்ந்து கணக்கு வைத்திருக்கவும் POPகள் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

எனவே, அவர்களுடைய கணிசமான பங்களிப்புக்கும், உழைப்புக்கும் வெகுமதி கொடுக்கும் வகையில் செப்டம்பர் 1, 2022 முதல் அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். இந்த டிரைல் கமிஷன், eNPSஇற்கு வழங்கப்பட்ட பங்களிப்பைப் போலவே, டி-ரெமிட்டன்சும் இருக்கும். PFRDA, ஜனவரி 31, 2022 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் POPகளுக்கான கட்டண அட்டவணை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Govt Scheme, National Pension Scheme