தேசிய நுகர்வோர் தினம் : புதிய மின்சார விதிகள் 2020 குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?

தேசிய நுகர்வோர் தினம் : புதிய மின்சார விதிகள் 2020 குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?

மாதிரி படம்

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020ன் முக்கியத்துவம் என்னவென்றால், சேவைகள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நுகர்வோர் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் டிசம்பர் 24-ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அனைவருமே ஒரு விதத்தில் நுகர்வோர் தான். நுகர்வோரை வைத்து தான் வியாபார சந்தையே நடக்கிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏமாறுவது தடுக்கப்படும். இந்த நுகர்வோர் தினத்தன்று புதிய மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020 குறித்து முழு விவரத்தையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

புதிய மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020, நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரமான சேவையைப் பெறுவதற்கான உரிமையை  வழங்குகிறது. மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020 டிசம்பர் 21, 2020 அன்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கிய மின்வாரிய அமைச்சர் ஆர்.கே.சிங், “இந்த விதிமுறைகளின் வாயிலாக மின்சார நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. 

நுகர்வோருக்கு பணி செய்வதே மின்அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்பதை கருத்தில் கொண்டும், தொய்வற்ற மின்சாரத்தையும், நம்பகத்தன்மையான சேவையையும் பெறுவது நுகர்வோரின் உரிமை என்பதை முன்னிறுத்தியும் இந்த விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.  இந்த விதிகள்  நாடு முழுவதும் வணிகத்தை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.  

புதிய விதிகளின்படி, மின்சார விநியோக நிறுவனங்களிடமிருந்து குறைந்தபட்ச தரமான சேவையைப் பெற மின்சார நுகர்வோருக்கு உரிமை உண்டு. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று மத்திய மின் அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார். இதற்காக அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. வரவிருக்கும் நேரத்தில், எந்தவொரு நபரும் மின்சாரம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். நுகர்வோர் உரிமைகளை களங்கப்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும், இந்த தொகை நுகர்வோர் கணக்கில் வரவு வைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 

Also read... Gold Rate | சற்று குறைந்தது தங்கம் விலை... உயர்ந்தது வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

புதிய மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020ன் கீழ் வரும் முக்கிய பகுதிகள் இங்கே:

* நுகர்வோரின் உரிமைகள் மற்றும் விநியோக உரிமதாரர்களின் கடமைகள்

* புதிய இணைப்பை வழங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்பில் மாற்றம்

* பில்லிங் மற்றும் கட்டணம்

* அளவீட்டு ஏற்பாடு

* குறை தீர்க்கும் வழிமுறைகள் 

* விநியோகத்தில் நம்பகத்தன்மை

* மின்சாரத்தை துண்டித்தல் மற்றும் மீண்டும் இணைத்தல்

* உரிமதாரரின் செயல்திறனின் தரநிலைகள்

* இழப்பீட்டு வழிமுறைகள் 

* நுகர்வோர் சேவைகளுக்கான அழைப்பு மையம்

புதிய மசோதாவின் படி, மின்சார சேவை வழங்குநர் ஒரு வளாகத்தின் உரிமையாளரின் வேண்டுகோளின் பேரில் மின்சாரம் வழங்குவது அவரின் கடமையாகும். வழங்குநர்கள் அனைத்து நுகர்வோருக்கும் 24 * 7 மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பதே விநியோகத்தின் நம்பகத்தன்மையாக கருதப்படுகிறது. ஆனால் சில வகை விவசாயங்களுக்கு மின்சாரம் வழங்கும் மணிநேரங்களை குறைக்க ஆணையம் அனுமதித்துள்ளது.

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020ன் முக்கியத்துவம் என்னவென்றால், சேவைகள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக, மெட்ரோ நகரங்களில், புதிய மின்சார இணைப்பு பயன்படுத்தப்பட்ட 7 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். நகராட்சி பகுதியில் 15 நாட்களுக்குள் புதிய இணைப்பு வழங்கப்படும், கிராமப்புறங்களில் 30 நாட்களுக்குள் புதிய இணைப்புகள் வழங்கப்படும். 

இணைப்பு காணப்பட்டாலும் மீட்டர் நிறுவப்படவில்லை என்று கிராமங்களில் பல இடங்களில் புகார்கள் உள்ளன. அதனால் புதிய விதியின் படி மீட்டர் இல்லாமல் புதிய மின்சார இணைப்பு வழங்கப்படாது. ஸ்மார்ட் (Smart) அல்லது ப்ரீபெய்ட் மீட்டர் (Prepaid meter) நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி இணையதளம் வாயிலாக நுகர்வோர் புதிய மின்சார இணைப்புகளுக்கு பதிவு செய்வதுடன், மின் கட்டணத்தையும் செலுத்தலாம் என்றும் புதிய மின் இணைப்பு, பணம் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இதர சேவைகளை கால வரைக்குள் வழங்குவதை இந்த விதிகள் உறுதி செய்யும் என்றும் மின்வாரிய அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார். உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: