Home /News /business /

டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சந்திரசேகரன் மீண்டும் தேர்வு... 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சந்திரசேகரன் மீண்டும் தேர்வு... 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

சமீபத்தில் ஏர் இந்தியாவை டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இதன்படி 69 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக நாமக்கல் மாவட்டம் மோகனூரை பூர்வீகமாக கொண்ட என். சந்திர சேரகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பணிக்காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டாடா குழுமங்களின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக கமிட்டியில் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த என். சந்திர சேகரன் உறுப்பினராக இடம்பெற்றார். திறமையான செயல்பாடு காரணமாக அவருக்கு 2017 ஜனவரி மாதம் டாடா சன்ஸின் நிர்வாக தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க - கிரெடிட் கார்டு என்றால் இப்படித்தான் என சொல்லப்படும் 5 முக்கியமான கட்டுக்கதைகள்

    இந்நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு சந்திரசேகரனின் பொறுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    டாடா சன்ஸின் நிர்வாக தலைவர் சந்திரசேகரனின் திறமையான செயல்பாட்டை, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர். சந்திரசேகரன் மீண்டும் டாடா சன்ஸின் நிர்வாக தலைவராக ஒருமனதாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பான தேர்வு கூட்டத்தில் டாடா சேர்மன் ரத்தன் டாடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சந்திரசேகரனின் தலைமையின் கீழ் டாடா குழுமம் சிறப்பாக செயல்பட்டது குறித்து ரத்தன் டாடா தனது திருப்தியை வெளிப்படுத்தினார். சந்திர சேகரனின் பணிக்காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு ரத்தன் டாடா பரிந்துரைத்தார்.
    இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்கள் நேராக செல்ல வேண்டாம்.. காரணம் இருக்கு!

    கடந்த ஆண்டு மார்ச் 31-ம்தேதியுடன் நிறைவுபெற்ற நிதியாண்டில் மட்டும் டாடா குழுமம் ரூ. 103 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 7.7 லட்சம் கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியுள்ளது.

    சமீபத்தில் ஏர் இந்தியாவை டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இதன்படி 69 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்கிறது.

    இதற்கும் சந்திர சேகரனின் திறமையான நிர்வாகமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 'டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் வருவதை நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இதனை உலகத் தரம் வாய்ந்த விமானப்போக்குவரத்து நிறுவனமாக நாங்கள் மாற்றிக் காட்டுவோம்' என்று கூறியுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தத்தின்போது சந்திரசேகரன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: TATA

    அடுத்த செய்தி