கொரோனாவுக்கு பிறகு தனிநபர்கள் பலரும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்க ஆரம்பித்திருந்தாலும், பெரு நிறுவனங்கள் தொடங்கி சில சிறு நிறுவனங்கள் வரை தங்களது பணியாளர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட தொகை வரை விபத்து, உடல் நலக்கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.
என்ன தான் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்க விரும்பினாலும், சிகிச்சைக்கான உண்மையான செலவை விட, அது சார்ந்த துணை சேவைகள் தான் அதிக தொகையை எடுத்துக் கொள்கின்றன. அதிலும் பெரும்பாலான துணை சேவை கட்டணங்கள் இன்சூரன்ஸில் கவர் ஆகாமல் கூட போகலாம்.
இதனை தவிர்க்க சிறிய நோய்களுக்கு சிகிச்சை பெற மூன்றாம் நிலை மருத்துவமனைகளைத் தேர்வு செய்வது, மருத்துவமனையில் அதிக வாடகைகளைக் கொண்ட அறைகளை தேர்ந்தெடுப்பது, நோய் அல்லது சிகிச்சை அடிப்படையில் மருத்துவமனையின் செலவைக் கட்டுப்படுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடுவது ஆகியவை ஒரு தீர்வாக அமையும்.
GHI பாலிசியில் அனைத்தும் கவர் ஆகுமா.?
குரூப் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பொறுத்தவரை தங்களது பாலிசி கவரேஜ் என்ன என்பதையே பெரும்பாலான ஊழியர்கள் அறிந்திருப்பது கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளும் குறிப்பிட்ட நோய்க்கான காத்திருப்பு காலக்கட்டம், குறிப்பிட்ட சிகிச்சைக்கான தொகை வரம்பு, நோயாளிகள் தங்கும் அறையின் வாடகை ஆகியவற்றை கொண்டுள்ளன. இவை அனைத்துமே சரியான நேரத்தில் பாலிசி க்ளைம்களுக்கான தீர்வை பெறுவதில் முக்கிய பங்குவகிக்கின்றன.
Also Read : இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது.. விதிகளை மாற்றிய மத்திய அரசு.!
உங்கள் நிறுவனம் குரூப் இன்சூரன்ஸ் பாலிசிகளை தொடராமல் போகலாம் அல்லது கார்ப்பரேட் பாலிசி இன்சூரன்ஸுக்கான பலன்கள் மாற்றப்படலாம் என்பதை பணியாளர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக வேலை இல்லாமல் போகும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பலன்களும் கிடைக்காது என்பதால், ஆரம்பத்தில் இருந்தே தனிநபர் அல்லது குடும்பத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருப்பது, பணத்தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் திடீர் மருத்துவ செலவுகளை குறைக்க கை கொடுக்கும்.
Also Read : இனி கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கிகள்.!
ஸ்டார்ட்அப்கள் மற்றும் SME களுக்கு GHI தேவை இல்லையா.?
அனைத்து அளவிலான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது முக்கியமான ஒன்று. குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் (GHI) என்பது பெரிய நிறுவனங்கள் மட்டுமே அணுகக்கூடிய மற்றும் பெறக்கூடியவையாக இருப்பதால் ஸ்டார்ட் அப் மற்றும் எஸ்எம்இ நிறுவனங்கள் குரூப் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுப்பது கிடையாது. மேலும் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே பணியாற்றுவதால், பெரு நிறுவனங்களைப் போல அதிக இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் குறைவான ப்ரீமியம் போன்ற எந்த சலுகைகளும் கிடைப்பது கிடையாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.