மக்களவை தேர்தலுக்காக ‘மை’ தயாரிக்கும் பணியில் பம்பரமாக இயங்கி வரும் மைசூரு நிறுவனம்!

ஒரு மை குப்பியைப் பயன்படுத்தி 800 முதல் 850 நபர்களின் கை விரலில் மை வைக்க முடியும்.

news18
Updated: March 14, 2019, 12:28 PM IST
மக்களவை தேர்தலுக்காக ‘மை’ தயாரிக்கும் பணியில் பம்பரமாக இயங்கி வரும் மைசூரு நிறுவனம்!
வாக்காளர்
news18
Updated: March 14, 2019, 12:28 PM IST
தேர்தல் சமயங்களில் வாக்காளர்களின் கை விரலில் அழியாத மையைத் தடவி வாக்களித்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்வது வழக்கம். அதற்கான மை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கர்நாடகா மாநிலம் மைசூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிட்டெட் நிறுவனம் தயாரிக்கும் அழியாத மை தான் வாக்களிக்கும் போது கை விரலில் வைக்கப்படும்.

அழியா மை


வரும் மக்களவை தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் 26 லட்சம் குப்பி மை ஆர்டரை மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு ரூ.33 கோடி என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் மை தயாரிக்கும் ஆர்டரை இந்த நிறுவனத்திற்கு டிசம்பர் மாதமே அளித்துள்ளது. தற்போது வரை 20 லட்சம் மை குப்பிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள 6 லட்சம் மை குப்பிகளை அடுத்த இரண்டு வாரத்தில் டெலிவரி செய்ய உள்ளதாகவும், ஊழியர்கள் இரவும் பகலுமாக பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.ஒரு மை குப்பியைப் பயன்படுத்தி 800 முதல் 850 நபர்களின் கை விரலில் மை வைக்க முடியுமாம். 1962-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் அனைத்து தேர்தலுக்கும் இந்த நிறுவனம்தான் மை குப்பியை விநியோகித்து வருகிறது.
Loading...
2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 22 லட்சம் மை குப்பிகள் ஆர்டரை மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிட்டெட் பெற்று இருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக 4 லட்சம் மை குப்பிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க:
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...