பெண்களை கொச்சைப்படுத்தும் லோகோ - புகாருக்கு பணிந்து லோகோவை மாற்றும் Myntra நிறுவனம்!

பெண்களை கொச்சைப்படுத்தும் லோகோ - புகாருக்கு பணிந்து லோகோவை மாற்றும் Myntra நிறுவனம்!

Myntra நிறுவனம்!

மிந்திரா நிறுவனத்தின் லோகோ பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக, மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

  • Share this:
பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் லோகோ இருப்பதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், புதிய லோகோவை அறிமுகம் செய்ய Myntra நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இணையாக ஆன்லைன் ஷாப்பிங்கில் மிந்திரா நிறுவனம் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பேஷன் ஈ-காமர்ஸ் நிறுவனமாகவும் உள்ள மிந்திரா நிறுவனம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் லோகோ பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக, மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் அந்த நிறுவனம் தனது லோகோவை மாற்றி புதிய லோகோவை விரைவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

மும்பையில் செயல்பட்டு வரும் அவஸ்டா பவுண்டேசனை சேர்ந்த நாஸ் பட்டேல் என்பவர் அளித்துள்ள புகாரில், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ள மிந்திரா நிறுவனத்தின் லோகோவை மாற்ற வேண்டும், ஒருவேளை அந்தநிறுவனம் லோகோவை மாற்ற தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டிருந்தார்.

Myntra நிறுவனம்!


மும்பை சைபர் குற்றப்பரிவில் இந்த புகாரை நாஸ் பட்டேல் கொடுத்திருந்தார். மேலும், சமூக வலைதளங்கள் வழியாகவும் மிந்திரா நிறுவனத்தின் ஆபாச லோகோ குறித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட மும்பை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை, இது தொடர்பாக மிந்திரா நிறுவனத்திடம் இமெயில் மூலம் விளக்கம் கேட்டது.

புகார் குறித்து பேசிய மும்பை சைபர் குற்றப்பிரிவைச் சேர்ந்த ராஷ்மி கரண்டிகார் , நாஸ் பட்டேல் அளித்த புகாரின் அடிப்படையில் மிந்திரா நிறுவனத்தின் லோகோவை ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அதில், மிந்திரா நிறுவனத்தின் லோகோ ஆபாசமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிவித்தார். காவல்துறையினர் புகாருக்கு, மிந்திரா நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளித்ததாக கூறிய டிசிபி ராஷ்மி கரண்டிகார், ஒரு மாதத்துக்குள் தங்களின் லோகோவை அவர்கள் மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார்.

மிந்திரா நிறுவனம், தங்கள் நிறுவனத்தை லோகோவை மட்டுமல்லாது செயலி மற்றும் வெப்சைட் ஆகியவற்றின் லோகோவையும் மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும், பேக்கேஜிங் மெட்டீரியல்களிலும் புதிய லோகோவை பிரிண்ட் செய்யுமாறு நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், விரைவில் அந்த நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்ய உள்ளது. ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மிந்திரா நிறுவனத்தில் ஆன்லைன் முன்னெப்போதும் இல்லாத வகையில் குவியத்தொடங்கியது.

நிமிடத்துக்கு சுமார் 18 ஆயிரம் ஆர்டர்கள் வரை பதிவானதாக தெரிவித்த அந்த நிறுவனம், End of season தள்ளுபடியில் புதிய உச்சத்தையும் தொட்டது. அந்த தள்ளுபடி சீசனில் மட்டும் சுமார் 1.35 கோடி பேர் வெப்சைட்டில் ஷாப்பிங் செய்ய வந்ததாகவும், 40 லட்சம் பேர் ஆர்டர் செய்ததாகவும் மிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. அமேசான், பிளிப்கார்டுக்கு இணையாக இந்திய ஆன்லைன் சந்தையில் தனி முத்திரையுடன் மிந்திரா நிறுவனம் உள்ளது என்பதற்கு இவை சான்றாக உள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: