இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது. அதிலும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் ஆபத்து இல்லாத முதலீடு மற்றும் குறைந்த முதலீட்டித் திட்டங்களில் பணத்தைச் சேமிக்க விரும்புவார்கள். அவற்றில் பெரும்பாலோனர் தற்போது தேர்வு செய்வது மியூச்சுவல் பண்ட் சேமிப்புத் திட்டம். தங்களிடம் உள்ள சிறிய தொகையைக்கூட மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து லாபங்களை பெற முடியும். எனவே தான் மக்களும் ஆர்வத்துடன் இதில் முதலீடு செய்கின்றனர்.
தற்போது மிடிஸ் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்கேற்ப 15*15*15 என்ற விதி மியூச்சுவல் பண்ட் பின்பற்றப்படுகிறது. எப்படி குறைந்த முதலீட்டில் இந்த புதிய முதலீட்டு திட்டம் கோடீஸ்வராக மாற்றுவதற்கு உதவுகிறது என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்.
தன்னிடம் உள்ள குறைந்த பணத்தை முதலீடு செய்ய விரும்புவோருக்கானத் திட்டம் தான் இது. 15*15*15 என்ற மியூச்சுவல் பண்ட்டின் புதிய விதியில் ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத வட்டி வழங்கும் திறன் இதில் உள்ளது. எனவே மாதந்தோறும் 15,000 ரூபாய் முதலீடு செய்து 15 ஆண்டுகளில் ஒரு கோடி வரை வருமானம் பெற முடியும் வசதியும் உள்ளது. இருந்தபோதும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் ஆண்டு தோறும் 15 சதவீத வருமானத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. ஆனால் 15 சதவிகித வருடாந்திர வருமானம் நிச்சயமாக நீண்ட காலத்திற்கு சாத்தியமாக அமையக்கூடும்.
வெறும் ரூ.399க்கு 10 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டம்..! - அசத்தும் பிரபல வங்கி
இதோடு நீங்கள் மியூச்சுவல் பண்டில் செலுத்தும் பணத்திற்கு வட்டியைப் பெறும் போது, உங்கள் அசல் தொகையும் சேர்ந்து அதிகரிக்கும். எனவே அடுத்த மாதம் உங்களிடம் உள்ள அசல் தொகை மற்றும் முதலீட்டு செய்யும் பணத்திற்கு வட்டியைப் பெற முடியும். இவ்வாறு ஒவ்வொரு மாதம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டியும் கணிசமாக அதிகரிக்கிறது. புதிய விதியின் படி, 15 சதவிகித வட்டி விகிதத்தின் படி, மாதந்தோறும் 15,000 என 15 ஆண்டுகள் முதலீடு செய்யும் போது ஒரு கோடி வரை நீங்கள் லாபம் பெறலாம். எனவே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த திட்டங்களை ஒவ்வொரு முதலீட்டாளர்களும் தேர்வு செய்து பயன் பெறலாம்
இந்த மாதத்தில் இது 2வது முறை.. எச்டிஎப்சி வங்கியின் புதிய அறிவிப்பு என்ன தெரியுமா?
அதே சமயம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் என்று வரும்போது, நீங்கள் பணத்தை மட்டுமல்ல, உங்கள் நேரத்தையும் முதலீடு செய்ய வேண்டும். சரியான நேரத்தில் நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயம் மிடிஸ் கிளாஸ்லிருந்து கோடிஸ்வராக சுலபமாக மாறலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mutual Fund, Savings