தொடர் விழிப்புணர்வு, டிஜிட்டல் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 65 லட்சமாக உயர்ந்துள்ளதாக மியூச்சுவல் பண்ட் சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய சூழலில் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சேமிக்க வேண்டும் என்ற பழக்கம் மக்களிடையே அதிகளவில் எழுந்துள்ளது. இதற்காக மக்கள் பெரும்பாலோனார் தங்களது சேமிப்புப் பணத்தை ஆர்.டி அல்லது எப்.டிகளில் முதலீடுகள் செய்து அதற்கான வட்டித்தொகையோடு தங்களின் பணத்தைப் பெற்று வருகின்றனர். அதே சமயம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தால் ஏமாந்து விடுவோம் என்ற மனநிலையில் மக்கள் இருந்தனர்.
ஆனால் தற்போது பாதுகாப்பான முதலீடு, வெளிப்பான மற்றும் ரிஸ்க் எதுவும் இல்லாத முதலீடு என்றால் மியூச்சுவல் பண்டு தான் என்ற நம்பிக்கையில் முதலீட்டு திட்டக் கணக்குகளைத் தொடங்குவோர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கானக் காரணம் என்ன இந்த நிதியாண்டில் மியூச்சுவல் பண்ட்டின் நிதி எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் உடனே செய்யவேண்டிய 5 விஷயங்கள்!
மியூச்சுவல் பண்ட்களில் கணக்குத் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?..
கொரோனா தொற்றினால் அனைத்துத்தரப்பட்ட மக்களும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்திக்க நேரிட்டது. தங்களிடம் ஏதாவது சேமிப்பு இருந்தால் நிச்சயம் ஓரளவிற்கு இப்பிரச்சனையிலிருந்து தப்பித்து இருக்கலாம் என மனநிலை மக்களிடம் அதிகளவில் ஏற்பட்டது. இந்த சூழலில் ரிஸ்க் இல்லாத முதலீடு அதே சமயம் வருவாயை அதிகளவில் தரக்கூடிய முதலீடுகளில் ஒன்றாக மக்கள் முன்பட்டது மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது தான்.
போஸ்ட் ஆபீஸில் மட்டுமே இது சாத்தியம்..7 நாள் முதல் 1 ஆண்டு திட்டத்திற்கு 5.50% வட்டி!
இது மட்டுமில்லாமல், கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு டிஜிட்டல் முறையை மக்கள் அதிகளவில் கையாள பழகிவிட்டனர். இவர்களுக்காகவே முதலீடுகளில் டிஜிட்டல் வழியில் மேற்கொள்ளக்கூடிய வசதிகளை மியூச்சுவல் பண்ட் ஏற்படுத்தி வருகின்றன. மேலும் முதலீடு குறித்த தெளிவுத்தன்மை, மியூச்சுவல் பண்ட் முதலீடு குறித்து விளம்பரங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலும் தற்போது இதில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகரங்களில் மட்டுமில்லை கிராமத்தில் வாழும் நபர்களுக்குக்கூட மியூச்சுவல் பண்ட் மீதான தெளிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான முதலீடு இது தான் என்ற நம்பிக்கையில் மக்களும் முதலீடுகளை இதில் செலுத்தி வருகின்றனர்.
2020-21 நிதியாண்டில் 81 லட்சமாக இருந்த ஃபோலியோகளின் எண்ணிக்கை, 2021-22 ல் 3கோடியே 17 லட்சமாக அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக, இதில் முதலீடு செய்யும் புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தரவுகளின் படி மார்ச் 2022ல் 12.95 கோடியாக இருந்த 43 பண்ட் ஹவுஸ்களைக் கொண்ட போலியோக்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 2022 ல் 13.65 கோடியாக உயர்ந்ததோடு 70 லட்சம் லாபத்தைப் பெற்று தந்துள்ளது.
மியூச்சுவல் பண்ட்களில் சில்லறை முதலீட்டாளர்களின் தொழில்துறை சொத்துக்களின் பங்கு மார்ச் மாதத்தில் 55.2 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 56.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதோடு ஈக்விட்டி, ஹைப்ரிட் மற்றும் தீர்வு சார்ந்த திட்டங்களின் கீழ் ஃபோலியோக்களின் எண்ணிக்கை, அதிகபட்ச முதலீடு சில்லறை வணிகப் பிரிவில் இருந்து, ஆகஸ்ட் 2022 நிலவரப்படி சுமார் 10.85 கோடியாக இருந்தது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்காக தொடங்கப்படும் ஃபோலியோகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Investment, Mutual Fund, Savings