முகப்பு /செய்தி /வணிகம் / உங்களால் நம்ப முடிகிறதா? ரூ. 50 முதலீடு செய்தாலே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

உங்களால் நம்ப முடிகிறதா? ரூ. 50 முதலீடு செய்தாலே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

ஜன் தன் யோஜனா

ஜன் தன் யோஜனா

மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

50 ரூபாய் மதிப்பு உங்களை லட்சாதிபதி ஆக்கும். சந்தேகமே வேண்டாம். அந்த திட்டம் குறித்த முழு தகவலை தான் பார்க்க போகிறோம்.

எப்போதுமே ஹார்டு வொர்க்கை விட ஸ்மார்ட் வொர்க் தான் கைக்கொடுக்கும். அது போல தான் சேமிப்பு. சேமிப்பு கணக்கை காட்டிலும் சில குறிப்பிட்ட முதலீடு திட்டங்களில் அதிக வருவாயைப் பார்க்கலாம். அப்படியொரு மிகச் சிறந்த முதலீடு திட்டம் தான், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது. நீங்கள் லட்சாதிபதி ஆவதும் கோடிஸ்வரராக உயர நினைப்பதும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த முதலீடு திட்டத்தில் தான் உள்ளது.இளம் வயதிலே சற்றும் கவனத்துடன் இதை ஆரம்பித்தால் ஓய்வு காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம். அதுவும் ரூ. 50 முதலே முதலீடு திட்டங்கள் தொடங்குகிறது.

தினமும் ரூ. 50 சேமித்தாலே போது நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி.பரஸ்பர நிதியத்தின் SIP திட்டம் குறித்து கேள்விப்பட்டு இருக்கீங்களா? கடந்த சில ஆண்டுகள் எஸ்.ஐ.பி முதலீடுகள் பெறும் கவனத்தை பெற்று வருகின்றன. முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் மற்றும் லாபம் கிடைப்பதால் எஸ்.ஐ.பி திட்டம் மீது அவர்களின் கவனம் அதிகம் செல்கிறது. எஸ்.ஐ.பியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் பணத்திற்கு பாதுகாப்புடன் நல்ல வருவாயும் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை முதலீடு செய்யக்கூடிய வசதியும் உள்ளது. மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கலாம். உங்கள் முதலீடுக்கு ஏற்ப முதிர்வு தொகை மாறுபடும். ஆனால் வட்டி 12 – 15% வழங்கப்படுகிறது.

தினமும் நீங்கள் ரூ. 50 சேமித்தால் மாதத்திற்கு 1,500 ரூபாய் உங்களின் முதலீடு ஆகும். இதை 35 வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால் வட்டி விகிதம் சராசரியாக 12.5% வழங்கப்படுகிறது. அப்படியென்றால் உங்களின் மொத்த முதலீட்டு தொகை ரூ.6.3 லட்சம், ஆனால் மொத்த ஓய்வூதிய மதிப்பு ரூ.1.1 கோடியாக உங்கள் கைக்கு கிடைக்கும். ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் 25 வயதில் செய்தால் தான் இந்த நிகர மதிப்பு கிடைக்கும். இதுவே, 5 வருடங்கள் கழித்து 30 வயதில் செய்தால் உங்களுக்கு 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு ஓய்வு பெறும் வயதில் ரூ.59.2 லட்சம் மட்டுமே கிடைக்கும். ஆகவே இளம் வயதில் முதலீடு என்பது எஸ்.ஐ.பியில் மிகவும் முக்கியமான தகுதி. வயது அதிகரிக்கும் போது முதலீட்டு காலம் குறைகிறது அதனால் முதிர்வு தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Mutual Fund