ஹோம் /நியூஸ் /வணிகம் /

2022 ஸ்பெஷல்..! ஃபேஸ்புக் முதல் டிவிட்டர் வரை..! மோசமான முடிவுகளை எடுத்த டெக் நிறுவனத் தலைவர்கள்..!

2022 ஸ்பெஷல்..! ஃபேஸ்புக் முதல் டிவிட்டர் வரை..! மோசமான முடிவுகளை எடுத்த டெக் நிறுவனத் தலைவர்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்தித்த நெருக்கடிகளுக்கு, உலகம் முழுவதிலுமே பணவீக்கம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக க்ரிப்டோ கரன்ஸியின் சரிவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்தவரை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். கிரியேட்டிவான, புதுமையான சிந்தனைகள், மாற்றங்கள் ஆகியவை தான் உலக அளவில் கொடிகட்டி பறக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களுக்கு அடிப்படையாக இருந்து வந்துள்ளன. அதே போல தான் 2022 ஆம் ஆண்டில் பலவிதமான மாற்றங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். இதில் ஒரு சில யோசனைகள், ஏன் இப்படி என்று சிந்திக்கும் அளவுக்கு மோசமான முடிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. மார்க் சூக்கர்பர்க்கின் ஃபேஸ்புக் முதல் இல்லாம எலான் மஸ்க்கின் ட்விட்டர் கையகப்படுத்துதல் வரை, உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி, மோசமான முடிவுகளை எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.

வேலைநீக்கம் நடக்க வாய்ப்பே இல்லை

இந்த ஆண்டின் தொடக்கமே தொழில்நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரை வேலை நீக்கம் அதாவது ரெசஷன் என்பதற்கு வாய்ப்பே கிடையாது, என்றுதான் தொடங்கியது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பத் துறையில் பணி நீக்கம் என்பதே இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதை பொய்யென்று நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். போதிய அளவுக்கு வருமானம் இல்லை என்பது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கிரிப்டோ வீழ்ச்சி, மற்றும் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

எலான் மஸ்க்கின் அதிரடி முடிவுகள்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க போகிறார் என்பது பல மாதங்களாக கூறப்பட்டு வந்தாலும் இந்த ஆண்டு அது உண்மையாகிவிட்டது. எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் ஒரு பதவியேற்ற உடனேயே அதிரடியான பல விதமான மாற்றங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் என்று பல தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ஒரே இரவில் 3700 ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் புளூ டிக் வேண்டுமென்றால் அதற்கு கட்டாயமாக சந்தா செலுத்த வேண்டும் என்பதையும் அறிவித்தார். இவை அனைத்துமே அவரை ஒரு மோசமான தலைவராக காட்டியது. தற்போது ட்விட்டரி அதன் உள்ளடக்கங்களை நிர்வகிப்பதற்கு யாருமே இல்லை, எனவே எப்பொழுது எந்த விதி மாறும் என்று தெரியாமல் அனைவருமே குழப்பத்தில் இருக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு உலகளவில் மிகப்பெரிய ஜர்னலிஸ்ட்டாக இருப்பவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. அவை திரும்பி ஆக்டிவேட் செய்யப்பட்டாலுமே இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

தனக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்ற ஒரே ஒரு காரணத்தால் ட்விட்டரை விலை கொடுத்து வாங்கிய எலான் மாஸ்க் தற்பொழுது தன்னை குறை சொல்பவர்கள் அனைவரையும் பழி தீர்த்து வருகிறார் என்ற மனநிலையோடு தான் செயல்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

எனவே ட்விட்டர் தொடர்ந்து இயங்குமா என்பதை இப்பொழுது ஒரு விவாதமாக பேசப்பட்டு வருகிறது! ஒருவேளை ட்விட்டரை எலான் காப்பாற்றி விட்டால் அது மிகப் பெரிய சமூக வலைதளமாக மாறும் என்பதிலும் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது!

மெடாவர்ஸ் மீதான எதிர்பார்ப்பும் தோல்வியும்

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் இந்த ஆண்டு சரியான வருமானமின்மை, மெட்டாவர்ஸ் மீது வைத்த நம்பிக்கை, அதற்காக முதலீடு செய்த தொகை என்று எல்லாவற்றிலும் தடுமாற்றத்தைச் சந்தித்தார். மெட்டாவர்ஸ் மிகப்பெரிய தோல்வி என்பது அனைவரும் அறிந்தது தான். ஏகப்பட்ட பணத்தை மெட்டாவர்ஸ் எனப்படும் விர்சுவல் உலகை உருவாக்குவதற்கு முதலீடு செய்த பிறகு, தொடர்ந்து பங்குகளின் மதிப்பு சரிந்தது.

Read More : யுபிஐ செயலிகளின் மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணபரிமாற்றம் செய்ய முடியும்?

மார்க் சூக்கர்பர்க் எதிர்பார்த்த அளவில், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எதிர்பார்த்ததை கொஞ்சம் கூட மெடாவெர்ஸ் நிறைவேற்றவில்லை. வருமானமும் குறைந்த காரணத்தால் ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்தார்.

என்னதான் ஃபேஸ்புக் தொடர்ந்து முதன்மையாக வகித்து வரும் ஒரு சமூக ஊடகங்களை முதன்மையான ஊடகமாக இருந்து வந்தாலும், டிக் டாக் மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதால் ஃபேஸ்புக் பலவித நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

அமேசானின் அலெக்சா தோல்வி

ட்விட்டர், ஃபேஸ்புக் இன்று இரண்டு முன்னணி சமூக ஊடகங்கள் சரிவையும் துணிவையும் சந்தித்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் தளங்களில் ஒன்றான அமேசான் மற்றொரு நெருக்கடியை சந்தித்துள்ளது.

அமேசான் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமேசானின் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆன அலெக்ஸா மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸா பிரபலமான ஒரு வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக இருந்தாலுமே இப்போது வரை அலெக்ஸாவால் வருமானம் எதுவும் ஈட்ட முடியவில்லை என்பது சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. அமேசான் பலவிதமான உத்திகளை பயன்படுத்தி வந்தாலுமே அதற்கு செலவழித்த தொகைதான் அதிகமாகிக் கொண்டே வந்தது, வருமானம் எதையும் பெறவில்லை.

அலெக்ஸா, பெரும்பாலும் வானிலை செய்தி, இசை மற்றும் சாதாரண சாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடிப்படை டிசைனில் பிரச்சனையுடன் வெளிவந்த ஆப்பிள் ஐபேட்

எவ்வளவு மொபைல் நிறுவனங்கள், பிராண்டுகள் வந்தாலுமே மிகப்பெரிய தனக்கென்று வாடிக்கையாளர்களுடன் வலம் வரும் ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஜென்ரேஷன் ஐபேடு மிக மிக குழப்பமான ஒரு சாதனமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

அடிப்படையிலேயே பலவிதமான குழப்பங்கள் இருக்கும் இந்த சாதனத்தை எவ்வாறு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது என்பதற்கு இப்போது வரை சரியான பதில் கிடைக்கவில்லை.

FTX கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவால்

தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்தித்த நெருக்கடிகளுக்கு, உலகம் முழுவதிலுமே பணவீக்கம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக க்ரிப்டோ கரன்ஸியின் சரிவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில் FTX என்ற கிரிப்டோ நிறுவனம் திவால் ஆகி, கிரிப்டோ உலகமே இருளுக்குள் மூழ்கியது என்று கூறலாம்.

First published:

Tags: Elon Musk, Trending, Viral, YearEnder 2022