ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 6வது பெரிய எண்ணெய் நிறுவனமானது ! ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 6வது பெரிய எண்ணெய் நிறுவனமானது ! ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி.
  • News18 Tamil
  • Last Updated: November 21, 2019, 12:41 PM IST
  • Share this:
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் உலகின் 6-வது பெரிய எண்ணெய் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

முதலீட்டை அதிகரிக்கும் வகையில் அலைபேசி மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து பங்கு சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களில் மட்டும் 6 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டது. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் பி.பி எண்ணெய் நிறுவனத்தை விட மிஞ்சி உலகின் 6 வது பெரிய எண்ணைய் நிறுவனம் என்ற நிலையை எட்டியுள்ளது.

இதேபோன்று முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 4 லட்சத்து 16 ஆயிரம் கோடியாக உயர்ந்ததால், ஆசியாவின் பெரிய பணக்காரராகவும் அவர் உருவெடுத்துள்ளார்.


முன்னதாக இந்திய பொருளாதார வளர்ச்சி, 2ம் காலாண்டில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில், அதற்கு நேர் எதிராக, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை எட்டின.

நேற்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிதம் அளவிற்கு அதிகரித்தது. இதன் மூலம் 10 டிரில்லியன் சந்தை முதலீட்டை அடைந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் பெற்றுள்ளது.

ஜியோ நிறுவனம் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதன் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று தரமதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன. இது 2021ம் ஆண்டுக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற ரிலையன்ஸ் வைத்துள்ள இலக்கை எட்ட உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading