இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 11-வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி!
முகேஷ் அம்பானி
  • News18
  • Last Updated: October 4, 2018, 10:51 PM IST
  • Share this:
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 11- ஆம் ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்திய அளவிலான இந்த ஆண்டுக்கான பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். 11- வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ள அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை விட 68,545  கோடி உயர்ந்துள்ளது.

தற்போது அம்பானியின் சொத்து மதிப்பு 3,48,577 கோடி ரூபாயாக உள்ளது. விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 1,54,759  கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட  14,739 கோடி ரூபாய் அதிகம்.


பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஆர்செலர் மிட்டல் நிறுவன தலைவர், லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 1,34,825 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறியுள்ளார் மிட்டல்.

தொழிலதிபர்கள் ஹிந்துஜா சகோதரர்கள், ஷிவ் நாடார், கோத்ரெஜ், திலீப் ஷங்வீ, குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி ஆகியோர் பட்டியலின் பத்து இடங்களுக்குள் உள்ளனர். உயிரி தொழில்நுட்ப முன்னோடியான கிரண் மசூம்தாரின் சொத்து மதிப்பு 66.7 சதவிகிதம் உயர்ந்து 26,523 கோடி ரூபாயாக உள்ளது.

பட்டியலில் இடம் பெற்றுள்ள நான்கு பெண்களில் மசூம்தாருக்கு 39-வது இடம் கிடைத்துள்ளது. பங்குச்சந்தைகளில் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு காணப்பட்டாலும், இந்தியாவின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.நூறு பேர் கொண்ட பட்டியலில் 11 பேரின் சொத்து மதிப்பு 7,368 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனர்களில் ஒருவரான ஆச்சாரியா பாலகிருஷ்ணா மற்றும் இண்டிகோ விமான நிறுவன தலைவர்கள் கபில் பாட்டியா, ராகுல் பாட்டியா ஆகியோரின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது

ஆச்சாரியா பாலகிருஷ்ணா 25-வது இடத்திற்கும், பாட்டியா 41- வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பட்டியலில் புதுவரவாக 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

முழு பட்டியலை அறிய: https://www.forbes.com/india-billionaires/list/
First published: October 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading