ஹோம் /நியூஸ் /வணிகம் /

முகேஷ் அம்பானி ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா-ஆகாஷ் அம்பானி தலைவராக நியமனம்

முகேஷ் அம்பானி ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா-ஆகாஷ் அம்பானி தலைவராக நியமனம்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, 2014ல் ஜியோ குழுவில் இணைந்தார். ஜியோவின் இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி விலகினார் என்ற செய்தியுடன் போர்டு தலைவராக ஆகாஷ் அம்பானி உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். மேலும், ஜியோவின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எண்ணெய் முதல் சில்லறை பொருட்கள் வரை விற்பனை செய்துவரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு அங்கமான ஜியோ நிறுவனத்தின் குழு உறுப்பினர்கள் ஆகாஷ் அம்பானியை புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.  ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, 2014ல் ஜியோ குழுவில் இணைந்தார். ஜியோவின் இயக்குனர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி விலகினார் என்ற செய்தியுடன் போர்டு தலைவராக அவர் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 27, 2022 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து 27ம் தேதி  திரு முகேஷ் டி அம்பானி ராஜினாமா செய்தார் என்று ஜியோ பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், "நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் 27, 2022 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு, சுயாதீன இயக்குநர்களாக , நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக, ரமீந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி.சௌத்ரி ஆகியோரை நியமிப்பதற்கு வாரியம் அனுமதி அளித்துள்ளதாக நிறுவனம்  குறிப்பிட்டுள்ளது. ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரை நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த முடிவுக்கு பங்குதாரர்களிடமிருந்து அனுமதி தேவைப்படும்.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதல் இடம் வகிக்கும் ஜியோவின் நிகர லாபம், மூன்றாம் காலாண்டில் ரூ.3,615 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் ரூ.4,173 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. செயல்பாட்டின் மூலம் கிடைத்த தனி வருவாய் ரூ.20,901 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் ரூ.17,358 கோடியுடன் ஒப்பிடுகையில் 20.4 சதவீதம் அதிகம் ஆகும்.

First published:

Tags: Aakash ambani, Mukesh ambani, Reliance Jio