ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்திய பொருளாதரத்தின் மதிப்பு 40 லட்சம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும்- முகேஷ் அம்பானி

இந்திய பொருளாதரத்தின் மதிப்பு 40 லட்சம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும்- முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

அடுத்த 25 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியிலும், வாய்ப்புகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

 • News18 India
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 2047-ம் ஆண்டுக்குள் 40 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது அவர், நூற்றாண்டு சுதந்திரத்தை கொண்டாட உள்ள அடுத்த 25 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியிலும், வாய்ப்புகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவித்தார்.

  தூய்மையான எரிசக்தி புரட்சி, உயிரி எரிசக்தி புரட்சி ஆகியவை எரிசக்தியை நீடித்து இருக்கச் செய்யும் என்றும், எரிசக்தியை சிறப்பான முறையில் பயன்படுத்தச் செய்ய டிஜிட்டல் புரட்சி வழிவகை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று புரட்சிகளும் பருவநிலை மாற்ற பாதிப்பிலிருந்து இந்த பூமியை உலகமும், இந்தியா-வும் காக்க உதவும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார்.

  தற்போது 3 லட்சம் கோடி டாலராக உள்ள இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 2047-ம் ஆண்டில் 40 லட்சம் கோடி டாலராக உயர்ந்து, உலகின் முதல் மூன்று பொருளாதாரத்தில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். எனவே, மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்குமாறும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Indian economy, Mukesh ambani