• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சாதித்த ரிலையன்ஸ்.. உலக அளவில் 100 பில்லியன் டாலர் கிளப்-ல் 11வது ஆளாக சேர்ந்த முகேஷ் அம்பானி!!

சாதித்த ரிலையன்ஸ்.. உலக அளவில் 100 பில்லியன் டாலர் கிளப்-ல் 11வது ஆளாக சேர்ந்த முகேஷ் அம்பானி!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடி டாலர்களைத் தாண்டியுள்ளது. இதன்மூலம், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் ஆகியோர் இடம் பிடித்திருக்கும் 100 பில்லியன் டாலர் கிளப்பில் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார்.

  • Share this:
    ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய தீருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின்னர், 2005-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தை பெற்றார் முகேஷ் அம்பானி.

    பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-சை சில்லறை வர்த்தகம், தொழில்நுட்பம், இணைய வர்த்தகம், தொலைத்தொடர்பு என பல துறைகளில் விரிவாக்கம் செய்தார்.

    அடுத்தடுத்து அறிவிப்புகள், ரிலையன்ஸ் பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 2021-ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 23 புள்ளி 8 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.

    மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, பசுமை ஆற்றலில், 3 ஆண்டுகளுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்ற முகேஷ் அம்பானியின் அறிவிப்பு, ரிலையன்ஸ் பங்குகளின் விலையை ஜெட் வேகத்தில் உயர்த்தியது. கடந்த மாதத்தில், குறைந்த விலையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும் என்ற அம்பானியின் அறிவிப்பும் இதற்கு வலுசேர்த்தது.

    இதன் வாயிலாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. உலக அளவிலான 100 பில்லியன் டாலர் கிளப்-ல் 11-வது ஆளாக முகேஷ் அம்பானி சேர்ந்துள்ளார். இதேவேளையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி எலான் மஸ்க்-கின் சொத்து மதிப்பு 222 பில்லியன் டாலராக உயர்ந்து 200 பில்லியன் டாலர் கிளப்-ல் சேர்ந்துள்ளார்.

    மஸ்கு-க்கு அடுத்தபடியாக ஜெஃப் பேசோஸ் 190 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஆசிய அளவில் முகேஷ் அம்பானி மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    100 பில்லியன் கிளப் உறுப்பினர்கள்:

    1. எலான் மஸ்க்- 222.18 பில்லியன்

    2. ஜெஃப் பெசோஸ் - 190.88

    3. பெர்னாட் அர்னால்ட் - 155.68

    4. பில் கேட்ஸ் - 127.98

    5. லாரி பேஜ் - 124.58

    6. மார்க் ஜூக்கர்பெர்க் - 123.08

    7. செர்கே பிரின்- 120.18

    8. லாரி எலிசன் - 108.38

    9. ஸ்டீவ் பால்மர் - 105.78

    10. வாரன் பஃபட் - 103.48

    11. முகேஷ் அம்பானி - 100.68

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: