இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 12-வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம், 34 கோடி வாடிக்கையாளர்களுடன், தொலைத்தொடர்பு சந்தையில் முதலிடத்தில் உள்ளது.

முகேஷ் அம்பானி.
- News18 Tamil
- Last Updated: October 11, 2019, 11:13 PM IST
இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 12-வது ஆண்டாக முதலிடத்தை அலங்கரித்து வருகிறார்.
இது தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவில் 100 பேர் கொண்ட பணக்கார்கள் பட்டியலில், மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 940 கோடி ரூபாய் சொத்துடன் அவர் முதலிடத்தில் உள்ளார்.
இதில், ஜியோ செல்போன் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 29 ஆயிரத்து 110 கோடி ரூபாயாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம், 34 கோடி வாடிக்கையாளர்களுடன், தொலைத்தொடர்பு சந்தையில் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோர் 2 மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 240 கோடி சொத்து மதிப்புடன் 6-வது இடத்தில் உள்ளார்.
Also Watch : ஜியோ அவுட்கோயிங் கால் கட்டணம் அறிவிப்பு - விளக்கம்
இது தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவில் 100 பேர் கொண்ட பணக்கார்கள் பட்டியலில், மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 940 கோடி ரூபாய் சொத்துடன் அவர் முதலிடத்தில் உள்ளார்.
இதில், ஜியோ செல்போன் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 29 ஆயிரத்து 110 கோடி ரூபாயாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம், 34 கோடி வாடிக்கையாளர்களுடன், தொலைத்தொடர்பு சந்தையில் முதலிடத்தில் உள்ளது.
Also Watch : ஜியோ அவுட்கோயிங் கால் கட்டணம் அறிவிப்பு - விளக்கம்