பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மலிவு விலையில் 4G ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான அவசர கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கவும், 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் 5G சேவைகளை உருவாக்க உதவவும், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா, அதன் டிஜிட்டல் புரட்சியின் முன்னணியில் நிற்கிறது எனவும், டிஜிட்டல் தொழில்துறை புரட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளில் உலகை வழிநடத்த தயாராக உள்ளது என்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியா மொபைல் காங்கிரஸ் 2020-இன் தொடக்க உரையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் முக்கிய பிரமுகர்களைக் குறிப்பிட்டு இந்த உரையை ஆற்றினார்.
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி மற்றும் இந்தியாவின் வலுவான 4G நெட்வொர்க் உட்கட்டமைப்பு ஆகியவை கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில், நிலைத்த வளர்ச்சியை எப்படி தக்கவைத்துக்கொண்டது என்பதைப் பற்றி அம்பானி உரையாற்றினார். பிரதமர் மோடியின் முன் நான்கு யோசனைகளை முன்வைக்கும் முன்பாக , இந்தியா எப்படி ஒரு டிஜிட்டல் புரட்சியின் விளிம்பில் உள்ளது என்பதை அவர் மேலும் விளக்கினார், இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு டிஜிட்டல் பின்புலத்தில் வளர முடியும் என்பது குறித்தும் விளக்கினார்.
"இந்தியாவில் 300 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் இன்னும் 2G காலத்தில் இருக்கிறார்கள். இந்த வறிய மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போன் இருப்பதை உறுதி செய்ய அவசர கொள்கை நடவடிக்கைகள் தேவை, இதனால் அவர்களும் தங்கள் வங்கி கணக்குகளுக்கு நேரடி பரிவர்த்தனைகளால் பயனடைய முடியும், மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தீவிரமாக பங்கேற்கவும் ஊக்குவிப்பது அவசியமாகிறது, "இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமூகமாக ஊக்குவிப்பதற்கான தனது முதல் யோசனையின் ஒரு பகுதியாக, இதை அம்பானி தெரிவித்தார்.
மேலும், "இந்தியா இன்று உலகின் சிறந்த டிஜிட்டல் இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த வழியைத் தக்கவைத்துக் கொள்ள, 5G-இன் ஆரம்ப வெளியீட்டை விரைவுபடுத்துவதற்கும், அதை மலிவாகவும், எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை நடவடிக்கைகள் தேவையானது ஜியோ என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் 2021-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5G புரட்சிக்கு முன்னோடியாக இருக்கும். இது உள்நாட்டின், நெட்வொர்க், ஹார்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும். ஜியோவின் 5 ஜி சேவை, ஆத்மநிர்பார் பாரத்தின் உங்கள் எழுச்சியூட்டும் பார்வைக்கு ஒரு சான்றாக இருக்கும் " என்றும் தெரிவித்தார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்ற இலக்குகளை ஆதரிக்கும் முயற்சியில் பங்கு வகிக்கிறது என்பதை அம்பானி மேலும் உறுதிப்படுத்தினார். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, உள்கட்டமைப்பு, நிதி சேவைகள் மற்றும் புதிய வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் ஜியோ இயங்குதளங்கள் தனது புதிய தொழில்நுட்ப சேவைகளை எவ்வாறு வழங்குகின்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். "ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், அதன் 20-க்கும் மேற்பட்ட தொடக்க பங்காளர்களைக் கொண்ட குடும்பத்துடன், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா, மெஷின் கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிளாக்செயின் போன்றவற்றில் உலகத் தரம் வாய்ந்த திறன்களை உருவாக்கியுள்ளது. இந்த தீர்வுகள் ஒவ்வொன்றும் நிரூபிக்கப்பட்டவையாகும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா, உலகின் பிற பகுதிகளுக்கு வழங்கப்படும்” என்றும் அம்பானி தெரிவித்தார்.
டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தவும் முடிக்கவும், மற்ற நாடுகளிலிருந்து பெரிய அளவிலான இறக்குமதியை இந்தியா நம்பியிருக்க முடியாது என்றும், ஒரு பெரிய, அதிநவீன தொழில் வளம் சார்ந்த இந்தியாவின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டினார் அம்பானி.
"அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்படும்போது, ஹார்ட்வேரில் இந்தியாவின் வெற்றியை, மென்பொருள் துறையில் நம்முடைய வெற்றியைப்போல மாற்ற முடியும் என்பதை நாங்கள் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியும்" என்று முகேஷ் அம்பானி தனது உற்சாகமான உரையின் முடிவில் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digital Transaction, Mukesh ambani, Nita Ambani, Reliance Digital, Reliance Foundation, Reliance Jio