புதிய மோட்டார் இன்சூரன்ஸ் திட்டம் நீங்கள் வாகனம் ஓட்டும்போது மட்டுமே பிரீமியம் செலுத்த அனுமதிக்கும் புதிய நடைமுறை கொண்டு வந்துள்ளது. Pay As You Drive என்பதற்கேற்றால் போல் உபயோகிக்கும் போது ஆன் மற்றும் தேவையில்லாத போது ஆஃப் செய்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
இன்சுரன்ஸ் என்பது அனைத்து தரப்பட்ட மக்கள் தொடங்கி நாம் உபயோகிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் முக்கியமான ஒன்று. குறிப்பாக கொரோனா பரவலுக்கு பிறகு, பல காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றாற் போல், தற்போது புதிய மோட்டோர் இன்சுரன்ஸ் திட்டத்தின்படி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி நீங்கள் வாகனம் ஓட்டும் போது மட்டுமே பணம் செலுத்துங்கள் அதவாது ‘ Pay As You Drive’ என்ற புதுவிதமான பாலிசியை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) சாண்ட்பாக்ஸ் திட்டத்தின் கீழ் முற்றிலும் டிஜிட்டல் செய்யப்பட்டுள்ள பாலிசி ஆகும். இந்த புதிய மோட்டார் இன்சுரன்ஸ் நன்றாக வாகனம் ஓட்டுபவர்களுக்குப் பணத்தை சேமித்து வைக்க உதவுகிறது. அதாவது கார் எத்தனை கிலோ மீட்டர்கள் பயணித்தது என்பதை பொறுத்து நீங்கள் இந்த இன்சுரன்ஸ் திட்டத்திற்கானப் பிரீமியம் செலுத்தலாம் என வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.
ஹோம் லோனில் வீடு வாங்க நினைப்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் நோட் பண்ணுங்க!
இந்தியாவின் முதல் கிளவுட் நேட்டிங் இன்சுரன்ஸ் நிறுவனமான எடெல்வீஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (EGI), தொந்தரவில்லாமல் இருக்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, மொபைல் டெலிமாடிக்ஸ் அடிப்படையிலான விரிவான மோட்டார் காப்பீட்டான SWITCHஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நீங்கள் Google play store அல்லது iOS ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொண்டு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் பயன்பாடு இயக்கத்தை கண்டறிந்து, வாகனம் எப்போது ஓட்டுகிறமோ? அப்போது காப்பீட்டைச் செயல்பட அனுமதிக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாகவும், எந்தவித தொந்தரவும் அளிக்காது என கூறப்படுகிறது.
இனி அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது எளிதல்ல.. பிடியை இறுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
இதே போன்று, எடெல்வீஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (EGI), இந்தியாவின் முன்னணி வலைத்தளமான Policy Bazar உடன் இணைந்து Edelweiss Switch, ஆன்- டிமாண்ட டிரைவர் அடிப்படையிலான காப்பீடு, புதுமையான ஆப் அடிப்படையிலான Motor OD ப்ளோட்டர் பாலிசியை வழங்குகிறது. இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன் மற்றும் ஆஃப் செய்துக்கொள்ள அனுமதியளிக்கிறது. இதோடு Switccar
மேலும் 'Edelweiss SWITCH' என்பது பல வாகனங்களை வைத்திருக்கும் மற்றும் ஒவ்வொரு வாகனத்தையும் அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது என கூறப்படுகிறது. இதோடு அவர்கள் பெரிய பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியதில்லை எனவும் இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கிறது. இதோடு பயணத்தை பெரும்பாலும் நம்பியிருப்போர் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக உங்களது வாகனங்களை எப்போதாவது பயன்படுத்துவர்களுக்கு இந்த புதிய மோட்டார் இன்சுரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் செலவை குறைக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Driving License, Insurance