Home /News /business /

Reliance AGM 2021: ஜியோ மலிவுவிலை 4ஜி போன்,5ஜி தொழில்நுட்பம்- கவனம் ஈர்த்த அறிவிப்புகள்!

Reliance AGM 2021: ஜியோ மலிவுவிலை 4ஜி போன்,5ஜி தொழில்நுட்பம்- கவனம் ஈர்த்த அறிவிப்புகள்!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராட ரிலையன்ஸ் அறக்கட்டளை ஐந்து முன்னெடுப்புகளை   தொடங்கியது .  மிஷன் ஆக்ஸிஜன், மிஷன் கொரோனா உள்கட்டமைப்பு, மிஷன் அன்னசேவா, மிஷன் ஊழியர்கள் நலன் மற்றும் மிஷன் தடுப்பூசி ஆகியவையே அவை

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.

ரிலையன்ஸ்  இண்டஸ்டிரீஸின் 44வது வருடாந்திர  பொதுக்கூட்டம் வீடியோ காஃன்பரன்ஸிங் முறையில்  இன்று நடைபெற்றது.  இதில்  உரையாற்றி ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு தொலைத்தொடர்பு, உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கியமான 8 அறிவிப்புகள்

சவூதி ஆராம்கோ ஒப்பந்தம்: சவூதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவூதி ஆராம்கோ உடனான தங்களது  கூட்டு தொடர்பாக  இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு எட்டப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தெரிவித்துள்ளது.  மேலும்,  இந்த 15  பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் முன்னோடியா, சவுதி அரம்கோ தலைவர் யாசிர் ஒத்மான் அல்-ர்மேயன் ரிலையஸ்  இண்டஸ்டிரீஸில்  சுயாதீன  இயக்குநராக சேரவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்பம்

5 ஜி தொழிற்நுட்பத்தை விரைவாக கொண்டுவர ஜியோ பணியாற்றி வருகிறது என தெரிவித்த முகேஷ் அம்பானி, 5ஜி சூழல் மண்டலத்தை உருவாக்கும் பொருட்டு, உலகளாவிய நண்பர்களுடன் இணைந்து 5ஜி சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் இதற்காக  ஜியோவுடன் கூகுள் நிறுவனம் இணைந்து பணியாற்றும் என்றும்,  ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு  சேவை வழங்குதற்கான தொழில்நுட்ப தீர்வை கூகுள் வழங்கும் என்றும் கூறினார்.

மிகப்பெரிய பசுமை எரிசக்தி வரைபடம்:

75,000 கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டில், புதிய எரிசக்தி சுற்றுச்சூழல் அமைப்பிற்கான அனைத்து முக்கியமான கூறுகளையும் உற்பத்தி செய்து ஒருங்கிணைக்க நான்கு ஜிகா தொழிற்சாலைகளை உருவாக்க ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிட்டெ திட்டமிட்டுள்ளது.

ஜியோ பல்கலைக்கழகம்:

ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பல்கலைக்கழகம், கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக நீடா அம்பானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.கோவிட் பராமரிப்பு:

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராட ரிலையன்ஸ் அறக்கட்டளை ஐந்து முன்னெடுப்புகளை   தொடங்கியது .  மிஷன் ஆக்ஸிஜன், மிஷன் கொரோனா உள்கட்டமைப்பு, மிஷன் அன்னசேவா, மிஷன் ஊழியர்கள் நலன் மற்றும் மிஷன் தடுப்பூசி ஆகியவையே அவை. இந்தியாவின் மருத்துவ தர ஆக்ஸிஜனில் 11 சதவீதத்தை ரிலையன்ஸ் உற்பத்தி செய்கிறது. இரண்டு வாரங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்  உற்பத்தியை நாளொன்றுக்கு  1100 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது.


மூன்று உறுதிமொழிகள்

அம்பானி முதலீட்டாளர்களுக்கு மூன்று உறுதிமொழிகளை அளித்தார். முதலாவதாக, உலகின் மிகப்பெரிய எரிசக்தி சந்தைகளில் ஒன்றாக திகழும் இந்தியா,  உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும். இரண்டாவதாக, எங்கள் இருப்புநிலை, திறமை, தொழில்நுட்பம் மற்றும் நிரூபிக்கப்பட்ட திட்ட செயல்படுத்தல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த திறமையின் அடிப்படையில் ரிலையன்ஸ் தலைமைத்துவத்தை வழங்கும். மூன்றாவதாக, ரிலையன்ஸ் தனது புதிய எரிசக்தி வணிகத்தை  உலகளாவிய வணிகமாக மாற்றும். 
ஊழியர்களுக்கான பலன்கள்:

வருடாந்திர கூட்டத்தில் பேசிய நீடா அம்பானி, ‘ரிலையன்ஸின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் வேலை இழப்பு, சம்பள குறைப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்காமல் பார்த்துக்கொண்டோம். இந்த நேரத்தில் முழு போனஸ் தொகையையும் ஊழியர்களுக்கு அளித்தோம்’ என்று குறிப்பிட்டார். மேலும் மறைந்த ரிலையன்ஸ் ஊழியர்கள் பெற்ற சம்பளத் தொகையை அவர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் வழங்கும். அவர்களின் குழந்தைகளின் கல்லூரி படிப்பு வரை அவர்களுக்கான கல்வி செலவை ரிலையன்ஸ் ஏற்கும், அத்துடன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு மருத்துவ பாதுகாப்பு தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, கொரோனாவால் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக ரிலையன்ஸ் வழங்கும் எனவும் நீடா அம்பானி கூறினார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
ஜியோபோன் நெக்ஸ்ட்

இந்த கூட்டத்தில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மற்றொரு அறிவிப்பு ஜியோ போன் நெக்ஸ்ட் குறித்ததாகும்.   இந்த மொபைல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கூட்டணியின் பதிப்பாக இருக்கும் என்று தெரிவித்த முகேஷ் அம்பானி, ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ஒரு முழுமையான பிரத்யேக ஸ்மார்ட்போன் ஆகும், இது கூகுள் மற்றும் ஜியோ இரண்டிலிருந்தும் பயன்பாடுகளின் முழு தொகுப்பையும் பயன்படுத்த முடியும். அத்துடன் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மூலம் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் முழு பயனையும் உபயோகிக்க முடியும். உலகளவில் மிகவும் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும்’ என்று உறுதிப்பட தெரிவித்தார்.  ம் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10-ம் தேதி இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Mukesh ambani, Reliance, Reliance AGM 2021

அடுத்த செய்தி