ஹோம் /நியூஸ் /வணிகம் /

மூன்லைட்டிங்கிற்கு தீர்வு - ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன சிஇஓ

மூன்லைட்டிங்கிற்கு தீர்வு - ஐடி நிறுவனங்கள், ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன சிஇஓ

அவினாஷ் ஜோஷி

அவினாஷ் ஜோஷி

சில நேரங்களில், காலத்திற்கு ஏற்றார்போல ஒரு சில மாற்றங்கள் உண்டாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல, இப்போது வாழ்க்கை இல்லை.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோவிட் தொற்றுக்குப் பிறகு மூன்லைட்டிங் என்பது ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறி இருக்கிறது. மூன் லைட்டிங் என்பது 2 அல்லது 3 இடங்களில் வேலை பார்ப்பதை குறிக்கிறது. சில நேரங்களில் போட்டி நிறுவனத்திற்கும் ஊழியர்கள் வேலை பார்ப்பது ஐ டி நிறுவனங்களுக்கு பாதகமாக அமையலாம் என்பதால் மூன்லைட்டிங் செய்யும் ஊழியர்களை நீக்க வேண்டும் என்று பல ஐடி நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு வந்தது.

  ஒரு சில நிறுவனங்களில் மூன்லைட்டிங் செய்யும் ஊழியர்கள் கண்டறியப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். சம்பளம் போதவில்லை, கூடுதல் நேரம் இருக்கிறது என்ற காரணத்தால் ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனத்தை தவிர்த்து மற்ற இடங்களில் பார்ட் டைம் அல்லது ஃப்ரீலான்ஸ் ஆக கூடுதலாக பணி செய்து பணம் ஈட்டுகின்றனர்.

  ஊழியர்களை மூன்லைட் செய்யக்கூடாது என்று ஒருசில நிறுவனங்கள் கட்டாய அறிக்கை வெளியிட்டிருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் வேலையை விடுவதில் தயாராக இருக்கிறோம் என்று பெரும்பாலான ஊழியர்கள் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் மூன்லைட்டிங் என்பது ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தொல்லையாக மாறியுள்ளது.

  மூன்லைட்ங்கிற்கு மிகவும் கச்சிதமான ஒரு தீர்வை ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கண்டுபிடித்துள்ளார். அவர் யார், என்ன தீர்வை வழங்கி இருக்கிறார் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  ஊழியர்கள் ஏன் மூன்லைட்டிங் செய்கிறார்கள்?

  புதிதாக ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள் ஜூனியர் ஊழியர்கள் மற்றும் சீனியர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றன. குறிப்பாக, ஜூனியர் ஊழியர்கள் ஆண்டுக்கு ₹2000 வரை தான் சம்பள உயர்வு பெறுகிறார்கள்.

  அதே நேரத்தில், மூத்த ஊழியர்கள் பெறும் சம்பள உயர்வு என்பது அவர்களுக்கு பிஎம்டபிள்யூ காரை வாங்கும் அளவுக்கு கணிசமான அளவு உயர்த்தப்படுகிறது. எனவே மூத்த ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் சம்பளம் போலவே ஜூனியர்களுக்கு ஏன் உயர்த்தப்படவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக ஏகப்பட்ட பொறியாளர்கள் மற்றும் போதிய திறன்கள் இல்லாதவையே காரணமாகக் கூறப்படுகின்றன.

  இந்த நிலையில் சுமாரான கல்லூரியில் பொறியியல் படிப்பை முடிப்பதே மிகவும் கடினமாக இருக்கும். அதை முடித்து, பெரிய நகரங்களில் வேலையில் கிடைத்தாலும் சம்பளம் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது.

  பெரிய நிறுவனங்களில் ஐ டி ஊழியராக இருக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள மட்டுமே முடியும் தவிர நிறுவனங்கள் வழங்கும் சம்பளம் தேவையான அடிப்படை செலவுகளுக்கு கூட பெரிய நகரங்களில் போதுமானதாக இல்லை என்பதை மறுக்க முடியாது.

  இந்த பிரிவுக்குள் வருபவர்கள் அடுத்தடுத்து தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொண்டு சில மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வேறு நிறுவனத்திற்கு பெரிய சம்பளம் வழங்கும் பணிக்கு மாறுகிறார்கள் அல்லது வெவ்வேறு இடங்களில் பணியாற்றுகிறார்கள்.

  சில நேரங்களில் தேவையான அளவுக்கு வருமானம் கிடைக்கும் மற்ற இடங்களில் பார்ட் டைமாக பணி செய்கிறார்கள். எனவே ஜூனியர் ஊழியர்கள் சிலருக்கு இது மூன்லைட்டிங் ஆகும் மற்றும் சிலருக்கு அமைதியாக ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கான அடிப்படையாகவும் அமைகிறது. இவை இரண்டுமே நிறுவனத்தின் மனிதவள ஊழியத் துறைக்கு சவாலாக இருக்கிறது.

  மூன்லைட்டிங் செய்யும் ஊழியர்களுக்கான தீர்வு:

  NTT இந்தியாவின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான அவினாஷ் ஜோஷி மூன்லைட்டிங் பற்றி ஒரு தீர்வை வழங்கி இருக்கிறார். இவர் தலைவராக இருந்தாலுமே, நிறுவனத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நியூஸ்18 செய்திகளுக்கு இதைப் பற்றி பேட்டி அளிக்கும் போது தெளிவாக கூறியிருக்கிறார். மூன்லைட்டிங் பற்றிய தனது தீர்வு என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

  சில நேரங்களில், காலத்திற்கு ஏற்றார்போல ஒரு சில மாற்றங்கள் உண்டாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல, இப்போது வாழ்க்கை இல்லை. பழக்க வழக்கங்கள் மாறியிருக்கின்றன. டிரெண்ட் என்பது மாறிக் கொண்டே வரும். எனவே தற்பொழுது மூன்லைட்டிங் என்பதும் ஒரு ட்ரெண்ட். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

  மூன்லைட்டிங் என்பது அனைவரும் வேண்டுமென்றே, போட்டி நிறுவனத்திடம் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலோ செய்வதில்லை. சில நேரங்களில் ஒரு விருப்பம், அல்லது அதிக நேரம் இருக்கிறது அல்லது ஒரு ஹாபியாக செய்கிறார்கள். சில நேரங்களில் தேவைகளுக்காக செய்கிறார்கள்; தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் பெரும்பாலானவர்கள் மூன்லைட்டிங் செய்கிறார்கள்.

  மூன்லைட்டிங் செய்வதால் அது ஊழியருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ பாதிப்பு ஏற்படப் போகிறது என்பது தான் இங்கே பிரச்சனையாக இருக்கிறது. இன்னொரு இடத்தில் பகுதி நேரமாகவோ, ப்ராஜெக்ட் வேலையோ ஒரு ஊழியர் செய்யும் பொழுது, அதை பற்றி தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் முன்கூட்டியே அறிவித்துவிட்டால், பிரச்சனையாகவே இருக்காது. எனவே, வெளிப்படையாக இருப்பது தான் இதற்கான ஒரே தீர்வு.

  எலானை மிஞ்சிய மார்க் -மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 ஊழியர்கள் நீக்கம்-அதிரடி அறிவிப்பு

  வெளிப்படையாக இந்த நிறுவனத்தில் இந்த வேலையை பார்க்கிறேன் என்றுதான் வேலை செய்யும் நிறுவனத்திடம் ஒரு ஊழியர் தெரிவித்துவிட்டால் இரண்டு தரப்புக்குமே பாதிப்பு ஏற்படுத்தாது. அதுமட்டுமல்லாமல், நிறுவனம் தங்களுடைய பாலிசிகளை உருவாக்கும் போது இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அதையும் சேர்த்து விட்டால் மூன்லைட்டிங் என்பதே ஒரு பிரச்சனையாக இனி யாருமே பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

  ஐடியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கட்டாயமாக திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் இந்த துறையில் நீண்ட காலம் பணியாற்ற முடியும் என்பது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததுதான். இதுவே இந்த துறைக்கு மிகப்பெரிய நன்மையும் கூட. தற்பொழுது எல்லா வணிகங்களும் டெக்னாலஜி சார்ந்த ஒரு வணிகமாக மாறிவிட்டது. எனவே, ஐடி சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது என்பது ஒரு ஊழியருக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

  ஆண்ட்ராய்டு யூசர்களே எச்சரிக்கை! இந்த 4 ஆப்ஸை உங்கள் மொபைலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்!

  ஒரு சில ஸ்கில்ஸ் காலம் காலமாக தேவைப்படும். உதாரணமாக இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட சேவைகள், டொமைன் சார்ந்த திறன்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதில் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

  அதே போலவே தொழில்நுட்ப அறிவு மட்டும் இல்லாமல் கோர் பிசினஸ் என்று கூறப்படும் அடிப்படை அறிவையும் வளர்த்துக் கொள்வது நிதி மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட துறைகளில் நல்ல வாய்ப்பைப் பெற உதவும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: IT Industry