• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மிடில் கிளாஸ் மக்களுக்கு கைக்கொடுக்கும் திட்டம்! ரூ.1000 முதல் சேமிப்பை தொடங்கலாம்!

மிடில் கிளாஸ் மக்களுக்கு கைக்கொடுக்கும் திட்டம்! ரூ.1000 முதல் சேமிப்பை தொடங்கலாம்!

அஞ்சல் சேமிப்பு

அஞ்சல் சேமிப்பு

1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

  • Share this:
    அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்(தனிநபர் மற்றும் கூட்டு சேமிப்பு கணக்கு) பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் வருவாயை அதிகரிக்க மிகச் சிறந்த இடம் அஞ்சலக சேமிப்பு. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவருக்கும் வருவாய் பெருக கைக்கொடுக்கிறது.நல்ல லாபம், பணத்திற்கு உறுதியான பாதுகாப்பு கிடைக்கிறது. ஒருவர் மாதாந்திர வருவாய் திட்டம் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு அஞ்சலக கணக்கு என்றால் அதிகபட்சமாக 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அஞ்சலக மாத வருவாய் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம்.

    18 வயது நிரம்பியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் அதிகபட்சமாக மூன்று பேர் வரை இணைந்து கணக்கு தொடங்கலாம்.ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு ரூ.29,700 வட்டியாக பெற முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் வட்டி மாறும். இதை நீங்கள் மாதாந்திர வருமானமாக கணக்கிடும்போது நீங்கள் செய்த முதலீடுக்கு மாதந்தோறும் ரூ.4,950 மாத வருமானம் கிடைக்கும்.இதை மாத மாதமும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    அஞ்சல் கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்புத்தொகைக்கு சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டிக்கு பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை நம் அஞ்சலக கணக்கிலேயே வரவு வைக்கப்படும். குறைவான சேமிப்பு தொகை ஆனால் நல்ல லாபம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த சேமிப்பை தேர்ந்தெடுக்கலாம். மாத வருமானமும் கிடைக்கும் முதலீடுக்கு ஏற்ப நல்ல வட்டியும் கிடைக்கும். அஞ்சல் சேமிப்பில் இருக்கும் இந்த மாதாந்திர வருவாய் திட்டம் பற்றி ஆன்லைனிலும் தெரிந்து கொள்ள முடியும். கூடுதல் விவரங்களுக்கு அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விசாரித்து பாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: