• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மாத சம்பளம் ரூ. 15,000 க்கு கீழ் வாங்குகிறீர்களா? நீங்கள் மாதம் ரூ. 3000 பெற முடியும் தெரியுமா?

மாத சம்பளம் ரூ. 15,000 க்கு கீழ் வாங்குகிறீர்களா? நீங்கள் மாதம் ரூ. 3000 பெற முடியும் தெரியுமா?

அரசு திட்டம்

அரசு திட்டம்

ஆதார் கார்டு மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்கை கொண்டு முதலில் இந்த திட்டத்தில் சேர வேண்டும்

  • Share this:
    உங்களின் மாதச் சம்பளம் ரூ. 15,000க்கு கீழ் உள்ளதா? அப்ப கண்டிப்பாக அரசு தரும் இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வரும் இந்த திட்டத்தில் இதுவரையில் 45 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். அதுமட்டுமில்லை இந்த திட்டத்தில் இணைவதற்கு மிகப் பெரிய தொகையோ விதிமுறைகளோ கிடையாது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து விட்டால் மாதம் ரூ. 3000 பென்சன் பெற முடியும். இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

    இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்சன் கிடைக்க வேண்டும் என்றால் உங்களின் மாத வருமானம் 15,000 ரூபாய்க்குக் கீழ் இருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்கை கொண்டு முதலில் இந்த திட்டத்தில் சேர வேண்டும். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இடம் அரசு பொது சேவை மையம். 18002676888 என்ற டோல் ஃபிரீ எண்ணைத் தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் இணைவது குறித்து கேட்டறியலாம்.

    இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பின்பு 60 வயதுக்கு மேல் உங்களுக்கு மாதம் ரூ. 3000 பென்சன் கிடைக்கும். அதே போல் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. பிஎஃப் அமைப்பு, தேசிய பென்சன் திட்டம், ஈஎஸ்ஐசி போன்ற திட்டங்களில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது.18 வயது நிரம்பிய ஒருவர் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதேபோல, 29 வயதில் இணைந்தால் 100 ரூபாயும், 40 வயதில் இணைந்தால் 200 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும். சரியாக உங்களுக்கு 60 வயது தொடங்கிய உடனே மாதம் ரூ. 3000 பென்சன் வீடு தேடி வர தொடங்கி விடும்.

    10 வருடத்திற்கு முன்பே இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் விலக நினைத்தால் நீங்கள் இதுவரை சேமித்த தொகை மட்டுமே உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். இதுவே 10 வருடங்களுக்கு பிறகு 60 வயது தொடங்குவதற்கு முன்பே இந்த திட்டத்தில் இருந்து விலக நினைத்தால் உங்கள் சேமிப்பு பணத்துடன் வட்டியும் சேர்த்து வழங்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: