• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • முதலீடு என்றால் இப்படி இருக்கணும்! மாத சம்பளம் போல் மாதம் மாதம் வட்டி வந்துவிடுமாம்

முதலீடு என்றால் இப்படி இருக்கணும்! மாத சம்பளம் போல் மாதம் மாதம் வட்டி வந்துவிடுமாம்

முதலீடு

முதலீடு

முதலீடு செய்த தொகையில் 2 விழுக்காடு கழித்து மொத்த தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

  • Share this:
    முதலீடுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம். போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் மாத வருமான திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

    போஸ்ட் ஆபிஸ் வழங்கும் இந்த திட்டத்தில், ஒரு முறை நீங்கள் பணம் செலுத்தினால் போதும், வட்டி தொகை மாதம்தோறும் பென்ஷனாக உங்களுக்கு கிடைத்துவிடும்.நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து மாதம் பென்ஷன் மாறுபடும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் வந்ததும், நீங்கள் செலுத்திய முதலீட்டு தொகை திருப்பி அளிக்கப்படும். இந்த திட்டத்திற்கு தற்போது 6.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒருவர் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்கு என்றால் ரூ.9 லட்சம் வரையில் சேமிக்கலாம். இதன் முதிர்வு காலம் 5 வருடங்கள் மட்டுமே.

    இந்தத் திட்டத்தில் நீங்கள் 50 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 275 வட்டி வழங்கப்படும். இதுவே பெரிய தொகையில் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு மாதம் கிடைக்கும் பென்சன் தொகை அதிகமாக இருக்கும். ரிடர்மெண்ட் தொகையை கையில் வைத்திருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த திட்டமாகும். ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு பென்ஷன் பெற்று வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம்.1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ. 550 ஆண்டிற்கு 6600 ரூபாய் . 4.6 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ 2475.இப்படியாக மாதம் பென்சன் தொகை முதலீடு தொகையை பொறுத்து கணக்கிடப்படுகிறது.

    இந்த மழைக்காலத்தில் உங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டுமா? எஸ்பிஐ கைக்கொடுக்கிறது!

    இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கினால் முதலீடு தொகையை ஒரு ஆண்டிற்கு முன்பு எடுத்திட முடியாது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை நிரந்தரமாக மூடிவிட்டு உங்களின் முதலீட்டு தொகையில் 2 விழுக்காடு கழித்து மொத்த தொகையும் திருப்பி அளிக்கப்படும்.எனவே, தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்து ஓய்வு பெறுபவர்கள் கண்டிப்பாக உங்கள் வாழ் நாள் சேமிப்பாக ஏதாவது ஒரு பென்சன் திட்டத்தில் முதலீடு செய்து வையுங்கள். கண்டிப்பாக உதவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: