அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை தொற்றானது, தற்போது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக்கில் இருவர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
குரங்கு அம்மை ,கொரானா தொற்றை போல அதிக தீவிரத்தன்மை கொண்டதாக இல்லாவிட்டாலும் , முன்பு உள்ள காலத்தில் பெரியம்மை நோயாளிகளிடம் தென்பட்ட அறிகுறிகளை ஒத்ததாக உள்ளது. இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19ஐப் போலவே, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான செலவை சந்திக்க தயாராக இருப்பது அவசியம்.
ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவத்திற்கான செலவுகளை மருத்துவ காப்பீடு திட்டங்கள் ஏற்குமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கலாம்.
இது குறித்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறுகையில், இந்தியாவில் முதன்முதலில் குரங்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், தனிநபர் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் அவர் பாதுகாக்கப்படுவார் என்றும், உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் நமக்கு உண்டாகும் நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சையின் மூலம் ஏற்படும் மருத்துவ செலவுகளைச் சமாளிப்பதில் பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.
Also Read : செலவை குறைக்கும் புதிய மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!
ஆனால், பயணக் காப்பீட்டுக் கொள்கைகளைப் பொறுத்தவரை, இவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்தியாவிற்கு வந்த பிறகு யாருக்காவது நோய்த்தொற்று ஏற்பட்டால், பயணக் காப்பீடு கவரேஜ் வழங்காது. மேலும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக, பயணச் சீட்டு வாங்கும்போது கவனமாக இருத்தல் அவசியம்.
பொதுவாக பயண காப்பீடுகள் அனைத்தும், நாம் வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் போது விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மட்டுமே உள்ளடக்கியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் நம் பயண காப்பீடுகளில் Medical hospitalization உள்ளதா என்பதை அறிந்து கொண்டு பயணம் மேற்கொண்டால் எந்த கவலையும் இல்லை.
Also Read : பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்.. இனி எல்லாமே ஈஸி தான்!
”ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் போது குரங்கு காய்ச்சலுக்கு எடுக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவச் செலவு அம்சத்தின் கீழ், காப்பீட்டுத் தொகை வரம்புகள் அல்லது துணை வரம்புகளின் கீழ் பயணக் காப்பீட்டில் அடங்கும். இருப்பினும், பொதுவாக பாலிசி கவரில் சேர்க்கப்படுவதில்லை. எனவே, பாலிசி அம்சங்கள் மற்றும் விலக்குகளை விரிவாகப் பார்த்து, போதுமான கவரேஜை உறுதிசெய்ய சரியான துணை நிரல்களைத்(sub-limits) தேர்ந்தெடுப்பது நல்லது,” என்று ஜெயின் எச்சரிக்கிறார்.
Also Read : இத்தனை வகை வங்கி மோசடிகள் நடக்குதாம்.. மக்களே உஷார்!
சுருக்கமாகச் சொல்வதானால், வெளிநாடுகளுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், வெளிநாடுகளில் மருத்துவக் காப்பீட்டை வழங்கும் பயணக் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவது மிகவும் முக்கியமானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.