• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 4 லட்சத்தைக் கடந்த சந்தாதாரர்கள்- மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் மனிகண்ட்ரோல் ப்ரோ

4 லட்சத்தைக் கடந்த சந்தாதாரர்கள்- மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் மனிகண்ட்ரோல் ப்ரோ

மனிகண்ட்ரோல் ப்ரோ

மனிகண்ட்ரோல் ப்ரோ

மனிகண்ட்ரோல் ப்ரோ தளத்துக்கு 4 லட்சத்துக்கும் கூடுதலாக சந்தாதாரர்கள் வந்துள்ளனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    மனிகண்ட்ரோல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘நெட்வொர்க் 18 & மீடியா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் நிதி விவகாரங்கள் குறித்து சப்ஸ்க்ரைப் செய்து தெரிந்துகொள்ளக் கூடிய வகையிலான தளமான மனிகண்ட்ரோல் ப்ரோவை சப்ஸ்க்ரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. எங்களுடைய வாசகர்கள் மற்றும் சந்தாதாரர்கள் அளித்த ஊக்கம் மற்றும் உறுதியான ஆதரவின் காரணமாக மனிகண்ட்ரோல் ப்ரோ தொடங்கி 30 மாதங்களுக்குள் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. உங்களுக்கு எங்கள் மனம்நிறைந்த நன்றிகள்.

    2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனிகண்ட்ரோல் ப்ரோ தொடங்கப்பட்டதிலிருந்தே இந்தத் தளம் சந்தாதாரர்களின் நலன்களை மையமாக வைத்து அவர்களுக்கு தேவைகளுக்கு மதிப்பு சேர்க்க தொடர்ந்து பாடுபட்டுவருகிறது. குழப்பமில்லாத தெளிவான தகவல்கள், முதலீட்டுத் தீர்வுகள், பிரத்யேக வர்த்தக பரிந்துரைகள், சுயாதீன நிதி நிறுவன ஆய்வுகள் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் சந்தாதாரர்களின் செல்வம் சேர்க்கும் பயணத்துக்கு நாங்கள் உதவ பாடுபட்டுவருகிறோம்.

    மனிகண்ட்ரோல் ப்ரோ மாறுபடக்கூடிய ஒத்துழைப்புக்குள் சென்றது. ஃபினன்சியல் டைம்ஸ் இதழுடன் கூட்டமைத்து அவர்களுடைய எடிட்டோரியல் செய்திகளை வழங்கியது. மற்றொரு முக்கியமானதாக எம்சி ப்ரோ மாஸ்டர்ஸ் விர்ச்சுவல் என்ற பெயரில் மாதம் ஒருமுறை வெப்மினார் நடத்தப்பட்டுவருவது கூடுதல் சேர்க்கையாக அமைந்துள்ளது. தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடனான நுண்ணறிவு உரையாடல்கள் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் முதலீடுகளில் தாக்கம் செலுத்தும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த ஆன்லைன் மாநாடுகள் உதவியாக அமைந்தன. இந்த ஆன்லைன் மாநாட்டில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை சராசரியாக 25,000 பேராக உள்ளது.

    தற்போது, மனிகண்ட்ரோல் ப்ரோவுக்கான ஆண்டு சந்தா 365 ரூபாய்க்கு வழங்குகிறோம். இது குறைந்த காலத்துக்கான சலுகைதான். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்தான். ஆன்ட்ராய்டு ஆப் அல்லது கணினியில் PRO365 என்ற சிறப்பு கூப்பன் மூலமே இந்தச் சலுகையை பெற முடியும். ஐஓஎஸ் பயனாளர்களும் இந்த கூப்பன் சலுகையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: